பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். கட்டுப்பாட்டில் பேஸ்புக்….. ராகுல் காந்தி குற்றச்சாட்டு

பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். கட்டுப்பாட்டில் பேஸ்புக்….. ராகுல் காந்தி குற்றச்சாட்டு

இந்தியாவில் பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். கட்டுப்பாட்டில் பேஸ்புக் உள்ளதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

காங்கிரசின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டிவிட்டரில், இந்தியாவில் பேஸ்புக்கை பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். கடடுப்படுத்துகிறது என்பதை மேலும் உறுதிப்படுத்துகிறது என்று பதிவு செய்து இருந்தார். மேலும் தனது கருத்துக்கு ஆதரவாக அதில், செய்தி நிறுவனத்தின் வீடியோ ஒன்றையும் பதிவேற்றம் செய்து இருந்தார். அந்த வீடியோவில் பேஸ்புக் தொடர்பாக வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் வெளியிட்டுள்ள அறிக்கையை மேற்கொள்காட்டி செய்தி நிறுவனம் கூறியிருந்தது.

பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். கட்டுப்பாட்டில் பேஸ்புக்….. ராகுல் காந்தி குற்றச்சாட்டு
ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.

வால் ஸ்ட்ரீட் ஜேர்னலின் அறிக்கையின்படி, வலதுசாரி அமைப்பான பஜ்ரங் தளத்தை தடை செய்வது பற்றி பேஸ்புக் விவாதித்தது. மேலும் அதை ஒரு ஆபத்தான அமைப்பு என்று கூறியது. ஆனால் ஊழியர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு எந்தவொரு நடவடிக்கையும் பேஸ்புக் நிர்வாகம் எடுக்கவில்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். கட்டுப்பாட்டில் பேஸ்புக்….. ராகுல் காந்தி குற்றச்சாட்டு
ராகுல் காந்தி

பேஸ்புக் நிறுவனம் இதுபோன்று சர்ச்சையில் சிக்குவது இது முதல் முறையல்ல. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இதே வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் வெளியிட்ட அறிக்கையில், சமூக ஊடக தளமான பேஸ்புக்கின் கொள்கைகள் ஒருபக்கச்சார்பானவை என்றும் வணிக நலன்கள் காரணமாக ஆளும் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக இருப்பதாகவும் செய்தி வெளியிட்டு இருந்தது.