காஷ்மீர் பண்டிட் குடும்பங்களின் துயரங்களை நாடு ஒரு போதும் மறக்காது… ராகுல் காந்தி

 

காஷ்மீர் பண்டிட் குடும்பங்களின் துயரங்களை நாடு ஒரு போதும் மறக்காது… ராகுல் காந்தி

காஷ்மீர் பண்டிட் குடும்பங்களின் துயரங்களை நாடு ஒரு போதும் மறக்காது என்று ராகுல் காந்தி காஷ்மீர் பண்டிட் சமூகம் தொடர்பாக திடீரென கருத்து தெரிவித்து இருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது பேஸ்புக் பக்கத்தில், எனது காஷ்மீர் பண்டிட் சகோதர சகோதரிகளுக்கு கருணை. உங்கள் குடும்பங்களின் துயரங்களை நாடு ஒரு போதும் மறக்காது. தாழ்மையான அஞ்சலி என்று பதிவு செய்து இருந்தார். ராகுல் காந்தி திடீரென காஷ்மீர் பண்டிட் சமூகம் குறித்து பேசியிருப்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

காஷ்மீர் பண்டிட் குடும்பங்களின் துயரங்களை நாடு ஒரு போதும் மறக்காது… ராகுல் காந்தி
காஷ்மீர் பண்டிட்கள் (கோப்புப்படம்)

ஜம்மு அண்டு காஷ்மீரில் 1989-90களில் தீவிரவாதம் உச்சத்தை எட்டியபோது காஷ்மீர் பண்டிதர்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஏராளமான காஷ்மீர் பண்டிதர்கள் தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள காஷ்மீரிலிருந்து தப்பிச் சென்றனர். அண்மையில் ராகுல் காந்தி காஷ்மீர் சென்று இருந்தபோது, நான் ஒரு காஷ்மீர் பண்டிட் மற்றும் என் குடும்பம் காஷ்மீர் பண்டிட் என்று தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

காஷ்மீர் பண்டிட் குடும்பங்களின் துயரங்களை நாடு ஒரு போதும் மறக்காது… ராகுல் காந்தி
சிறப்பு சட்டப்பிரிவு 370 நீக்கம்

2019 ஆகஸ்ட் 5ம் தேதியன்று ஜம்மு அண்டு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறந்து அந்தஸ்து நீக்கப்பட்டு, அந்த மாநிலம் ஜம்மு அண்டு காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. புதிய யூனியன் பிரதேசங்கள் உருவான 2 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக கடந்த ஆகஸ்ட் 10ம் தேதியன்று ஜம்மு அண்டு காஷ்மீர் யூனியன்பிரதேசத்துக்கு ராகுல் காந்தி சென்றார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் ராகுல் காந்தி மீண்டும் ஜம்மு அண்டு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது ரியாசி மாவட்டத்தில் திரிகூட மலையில் அமைந்துள்ள மா வைஷ்ணோ தேவி கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.