மோடி மைதானம்.. ரிலையன்ஸ் முனை, அதானி முனை… நாம் இருவர் நமக்கு இருவர் என்ற தாக்கிய ராகுல் காந்தி

மோடி மைதானம்.. ரிலையன்ஸ் முனை, அதானி முனை… நாம் இருவர் நமக்கு இருவர் என்ற தாக்கிய ராகுல் காந்தி

அகமதாபாத் மைதானத்தின் பெயரை நரேந்திர மோடி மைதானம் என மாற்றியது, மைதானத்தின் பந்து வீச்சு முனைகளுக்கு ரிலையன்ஸ் மற்றும் அதானி என பெயர் சூட்டியதை ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள மோடேரா சர்தார் படேல் மைதானம் புதிய அம்சங்களுடனும், நவீன வசதிகளுடனும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மைதானத்தில் 1.10 லட்சம் பார்வையாளர்கள் அமரும் வகையில் கட்டட்பட்டுள்ளது. இதனால் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் என்ற பெருமை பெற்றுள்ளது. இதுவரை ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்பர்ன் மைதானத்துக்குதான் மிகப்பெரிய மைதானம் என்ற பெருமை இருந்தது. அந்த மைதானத்தில் சுமார் 1 லட்சம் பார்வையாளர்கள் மட்டுமே அமர்ந்து விளையாட்டை ரசிக்க முடியும்.

மோடி மைதானம்.. ரிலையன்ஸ் முனை, அதானி முனை… நாம் இருவர் நமக்கு இருவர் என்ற தாக்கிய ராகுல் காந்தி
நரேந்திர மோடி மைதானம்

மோடேரா சர்தார் படேல் மைதானத்தின் பெயர் நரேந்திர மோடி மைதானம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நரேந்திர மோடி மைதானத்தை நேற்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார். மேலும் மைதானத்தின் பந்து வீசும் முனைகளுக்கு, ரிலையன்ஸ முனை எனவும், அதானி முனை எனவும் பெயரிடப்பட்டுள்ளது. மைதானத்தின் பெயர் நரேந்திர மோடி என்று மாற்றம் செய்யப்பட்டதை பல்வேறு எதிர்க்கட்சிகள் தலைவர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.

மோடி மைதானம்.. ரிலையன்ஸ் முனை, அதானி முனை… நாம் இருவர் நமக்கு இருவர் என்ற தாக்கிய ராகுல் காந்தி
ராகுல் காந்தி

பிரதமர் மோடி தலைமையிலான அரசு பெறுநிறுவன முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறது என்று குற்றம் சாட்டி வரும் ராகுல் காந்தி தற்போது மைதானம் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி டிவிட்டரில், உண்மை தன்னை எவ்வாறு வெளிப்படுத்துகிறது என்பது அழகானது. நரேந்திர மோடி மைதானம், அதானி முனை, ரிலையன்ஸ் முனை, ஜெய் ஷா தலைமை தாங்கினார். நாம் இருவர் நமக்கு இருவர். என பதிவு செய்து இருந்தார்.