சிந்தியா காங்கிரசில் இருந்திருந்ததால் முதல்வராகி இருப்பார்… ராகுல் காந்தி

 

சிந்தியா காங்கிரசில் இருந்திருந்ததால் முதல்வராகி இருப்பார்… ராகுல் காந்தி

ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரசில் இருந்திருந்ததால் முதல்வராகி இருப்பார் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.

டெல்லியில் காங்கிரஸ் இளைஞர் பிரிவு அமைப்பின் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட ராகுல் காந்தி பேசுகையில் கூறியதாவது: காங்கிரசுடன் இருந்திருந்தால் அவர் (ஜோதிராதித்ய சிந்தியா) முதல்வராகி இருப்பார். ஆனால் சிந்தியா பா.ஜ.க.வில் பேக் பெஞ்சராகி விட்டார். காங்கிரஸ் தொண்டர்களுடன் பணியாற்றி கட்சியை வலுப்படுத்தும் வாய்ப்பு சிந்தியாவுக்கு இருந்தது.

சிந்தியா காங்கிரசில் இருந்திருந்ததால் முதல்வராகி இருப்பார்… ராகுல் காந்தி
ஜோதிராதித்ய சிந்தியா

ஒரு நாள் நீங்கள் முதல்வர் ஆவீர்கள் என்று நான் அவரிடம் சொன்னேன். ஆனால் அவர் வேறோரு பாதையை தேர்வு செய்து விட்டார். எழுதி வைத்துக்கொள்ளுங்கள், அங்கு (பா.ஜ.க.) அவர் போதும் முதல்வராக முடியாது. அதற்காக அவர் இங்கு மீண்டும் திரும்பி வருவார். ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்துக்கு எதிராக போராடுங்கள். யாரையும் பார்த்து பயப்படாதீர்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார். சிந்தியா கடந்த ஆண்டு மார்ச் மாதம் காங்கிரசிலிருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தார்.

சிந்தியா காங்கிரசில் இருந்திருந்ததால் முதல்வராகி இருப்பார்… ராகுல் காந்தி
பா.ஜ.க.

2018ல் மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் குறுகிய வெற்றி வித்தியாசத்தில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. ஆனால் அந்த கட்சியின் முக்கிய இளம் தலைவராக இருந்த ஜோதிராத்திய சிந்தியாவுக்கும், முதல்வர் கமல் நாத்துக்கும் இடையே மோதல் இருந்தது வந்தது. இந்நிலையில் கடந்த மார்ச் மாதத்தில் யாரும் எதிர்பாராத வண்ணம் சிந்தியா பா.ஜ.க.வில் இணைந்தார். மேலும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 22 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இதனையடுத்து கமல் நாத் தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்து ஆட்சி கவிழ்ந்தது. இதனையடுத்து சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி அமைத்தது.