பொருளாதாரம் குறித்து மன்மோகன் சிங் அளித்த சிறப்பான பதில்… பழைய சம்பவத்தை சொன்ன ராகுல் காந்தி

 

பொருளாதாரம் குறித்து மன்மோகன் சிங் அளித்த சிறப்பான பதில்… பழைய சம்பவத்தை சொன்ன ராகுல் காந்தி

இந்தியாவில் 2 விதமான பொருளாதாரம் உள்ளது என பல ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தன்னிடம் கூறியதை தற்போது ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அமைப்புசாரா துறை அழித்து வருகிறது என குற்றம் சாட்டி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று டிவிட்டரில் ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவில் பல ஆண்டுகளுக்கு முன்பு பொருளாதாரம் தொடர்பாக தான் மன்மோகன் சிங்கிடம் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்களை தற்போது நினைவுப்படுத்தியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

பொருளாதாரம் குறித்து மன்மோகன் சிங் அளித்த சிறப்பான பதில்… பழைய சம்பவத்தை சொன்ன ராகுல் காந்தி
மன்மோகன் சிங்

2008ம் ஆண்டில் உலகம் ஒரு பொருளாதார புயலால் பாதிக்கப்பட்டது. அது அமெரிக்கா, ஜப்பான் மற்றும் சீனா என உலகின் அனைத்து பகுதிகளையும் பாதித்தது. அமெரிக்க வங்கிகள் வீழ்ந்தன, நிறுவனங்கள் சரிந்தன மற்றும் நிறுவனங்கள் மூடப்பட்டன, ஐரோப்பாவிலும் வங்கிகள் வீழ்ந்தன ஆனால் இந்தியா பாதிக்கப்படவில்லை. இந்தியாவில் அப்போது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் இருந்தது. நான் பிரதமரிடம் சற்று ஆச்சரியத்துடன் சென்றேன், டாக்டர் மன்மோகன் சிங் சொல்லுங்கள், இந்த விஷயங்கள் உங்களுக்கு புரிகிறதா? உலகம் முழுவதும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது ஆனால் இந்தியாவில் எந்த விளைவும் ஏற்படவில்லை. இதற்கு காரணம் என்ன? என்று நான் அவரிடம் கேட்டேன்.

பொருளாதாரம் குறித்து மன்மோகன் சிங் அளித்த சிறப்பான பதில்… பழைய சம்பவத்தை சொன்ன ராகுல் காந்தி
விவசாயிகள்

அதற்கு மன்மோகன் சிங், இந்திய பொருளாதாரத்தை ராகுல் புரிந்து கொள்ள விரும்பினால்,இந்தியாவில் 2 விதமான பொருளாதாரங்கள் உள்ளதை புரிந்துகொள்ள வேண்டும். முதலாவது அமைப்புசாரா பொருளாதாரம், இரண்டாவது அமைப்புசார் பொருளாதாரம். உங்களுக்கு தெரிந்த பெரிய நிறுவனங்கள் அமைப்புசார் துறையில் வரும். விவசாயிகள், பணியாளர்கள், சிறு கடைக்காரர்கள், நடுத்த நிறுவனங்கள் அமைப்புசாரா அமைப்பில் வரும். அமைப்புசாரா துறை வலுவாக இருக்கும்வரை எந்தவொரு பொருளாதார புயலும் இந்தியாவை தொட முடியாது என தெரிவித்தார்.