சோனியா காந்தியை வாழ்த்துமாறு மன்மோகன் சிங்கை கட்டாய்பபடுத்திய ராகுல்.. ஸ்மிருதி இரானி குற்றச்சாட்டு

 

சோனியா காந்தியை வாழ்த்துமாறு மன்மோகன் சிங்கை கட்டாய்பபடுத்திய ராகுல்.. ஸ்மிருதி இரானி குற்றச்சாட்டு

எந்தவொரு நிகழ்ச்சியிலும் முதலில் மாதா ஜி (சோனியா காந்தி) மற்றும் தன்னை வாழ்த்தி பேசுமாறு மன்மோகன் சிங்கை ராகுல் காந்தி கட்டாயப்படுத்தியதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி குற்றம் சாட்டியுள்ளார்.

குஜராத் மாநிலத்தில் இன்னும் சில தினங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ராஜ்கோட்டில் பா.ஜ.க. சார்பில் நடைபெற்ற பேரணியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது: மன்மோகன் சிங் ஜியால் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் நகலை காந்தி குடும்பத்தின் இளவரசர் (ராகுல் காந்தி) கிழித்தார். எந்தவொரு நிகழ்ச்சியிலும் மாதா ஜி (சோனியா காந்தி) மற்றும் தன்னையும் வாழ்த்தும்படி மன்மோகன் சிங்கை கட்டாயப்படுத்தினார்.

சோனியா காந்தியை வாழ்த்துமாறு மன்மோகன் சிங்கை கட்டாய்பபடுத்திய ராகுல்.. ஸ்மிருதி இரானி குற்றச்சாட்டு
சோனியா, ராகுல் காந்தி

பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்துக்கு வந்த பிறகு, படியில் தலைவணங்கி தன்னை முதன்மை சேவகன் அறிவித்தார். குஜராத் மற்றும் அதன் மக்கள் மீது அளவில்லாத வெறுப்பை காங்கிரசும், ராகுல் காந்தியும் கொண்டுள்ளனர். காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது, ஒருபோதும் குறைந்தபட்ச ஆதரவு விலையில் குஜராத் விவசாயிகளிடமிருந்து பருத்தியை கொள்முதல் செய்தது கிடையாது.ஆனால் நரேந்திர மோடி பிரதமரானது முதல், குஜராத் பருத்தி விவசாயிகள் இந்த திட்டத்தின்கீழ் (குறைந்த ஆதரவு விலை கொள்முதல்) ரூ.6 ஆயிரம் கோடி பெற்றுள்ளனர்.

சோனியா காந்தியை வாழ்த்துமாறு மன்மோகன் சிங்கை கட்டாய்பபடுத்திய ராகுல்.. ஸ்மிருதி இரானி குற்றச்சாட்டு
ஸ்மிருதி இரானி

நரேந்திர பாய், 8 மாதங்களாக 80 கோடி மக்களுக்கு இலவசமாக ரேஷன் வழங்கினார். லாக்டவுன் காலத்தில் 22 கோடி பெண்களின் வங்கி கணக்குகளுக்கு மொத்தம் ரூ.30 ஆயிரம் கோடி செலுத்தப்பட்டது. நீதிமன்றத்தில் ராமர் என்ற பெயரில் கடவுள் இல்லை என்று பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்தவர்களுக்கு பதிலளிக்க ஒவ்வொரு தேர்தலும் சிறந்த வாய்ப்பாகும். இந்த பேரணியில் பங்கேற்றுள்ள உங்கள் எண்ணிக்கையை பார்க்கும்போது, தேர்தல்களில் பா.ஜ.க. வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு அளிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.