‘மோடி அரசை துரத்துவது ரொம்ப ஈஸி’ – ராகுல் காந்தி அதிரடி பேச்சு!

 

‘மோடி அரசை துரத்துவது ரொம்ப ஈஸி’ – ராகுல் காந்தி அதிரடி பேச்சு!

தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி 3 ஆவது கட்ட பரப்புரையை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடங்கியிருக்கிறார். நேற்று காலை தனி விமானத்தில் தூத்துக்குடிக்கு வந்த அவர், தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் வழக்கறிஞர்களுடன் கலந்துரையாடினார். தூத்துக்குடி மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து பர்னாந்து அருகேயும் முத்தையாபுரத்திலும் பொதுமக்கள் மத்தியில் பரப்புரை மேற்கொண்டார்.

‘மோடி அரசை துரத்துவது ரொம்ப ஈஸி’ – ராகுல் காந்தி அதிரடி பேச்சு!

பின்னர் அங்கிருந்து நெல்லை மாவட்டம் நாங்குநேரிக்கு சென்ற ராகுல் காந்தி, அங்கு நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பாஜகவை கடுமையாக விமர்சித்து பேசினார். இதைத் தொடர்ந்து, இன்று நெல்லை பாளையங்கோட்டையில் இருக்கும் செயிண்ட் சேவியர்ஸ் கல்லூரியில் கலந்துரையாடினார். அப்போது ராகுல் காந்தி, கல்விக்கென தனிக் கொள்கையை உருவாக்க வேண்டும். பொருளாதார ரீதியாக வலுவானவர்களுக்கு மட்டுமே கல்வி என்பதை நான் நம்பவில்லை. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் உதவித்தொகையை அதிகப்படுத்துவோம் என்று பேசினார்.

‘மோடி அரசை துரத்துவது ரொம்ப ஈஸி’ – ராகுல் காந்தி அதிரடி பேச்சு!

தொடர்ந்து மிகவும் பலமாக இருந்த பிரிட்டிஷ் அரசை 74 ஆண்டுக்கு முன் நாம் துரத்தி விட்டோம் என்று கூறிய அவர், பிரிட்டிஷாரை துரத்திய நமக்கு மோடி அரசை துரத்துவது கடினமான வேலை அல்ல என்றும் தெரிவித்தார். மேலும், கல்வி, சுகாதாரத்தை ஏழை பணக்காரன் பாகுபாடின்றி மக்களுக்கு இலவசமாக கொடுக்க வேண்டும் என்றும் கூறினார்.