வங்கி துறையில் பெருநிறுவனங்கள்.. மக்களின் சேமிப்பு நேரடியாக பெருநிறுவனங்களுக்கு செல்லும்.. ராகுல் காந்தி தாக்கு

வங்கி துறையில் பெருநிறுவனங்கள்.. மக்களின் சேமிப்பு நேரடியாக பெருநிறுவனங்களுக்கு செல்லும்.. ராகுல் காந்தி தாக்கு

வங்கிகளை தொடங்க பெருநிறுவனங்களை அனுமதிக்கலாம் என்ற பரிந்துரை, மக்களின் சேமிப்பை நேரடியாக அந்தநிறுவனங்களுக்கு கொடுப்பது போன்றது என்று மோடி அரசை ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

தனியார் வங்கிகளின் உரிமையாளர்கள், பங்குதாரர்கள் ஆகியோருக்கான நெறிமுறைகளை மறுஆய்வு செய்வதற்காக பி.கே. மொஹந்தி தலைமையில் குழு ஒன்றை ரிசர்வ் வங்கி கடந்த ஜூன் மாதம் நியமனம் செய்தது. இந்த குழு அண்மையில் தனது பரிந்துரைகளை அளித்து இருந்தது. அதில், பெரு நிறுவனங்களும், தொழில் நிறுவனங்களும் புதிதாக வங்கிகள் தொடங்க அனுமதி அளிக்கலாம் என்ற பரிந்துரையும் அடங்கும். தற்போது இது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

வங்கி துறையில் பெருநிறுவனங்கள்.. மக்களின் சேமிப்பு நேரடியாக பெருநிறுவனங்களுக்கு செல்லும்.. ராகுல் காந்தி தாக்கு
இந்திய ரிசர்வ் வங்கி

ஒரு வங்கியில் கடன் பெறுபவர்களே அதன் உரிமையாளராக இருந்தால், கடன்களை எப்படி நிர்வகிக்க முடியும்? வங்கிகளை தொடங்க பெறுநிறுவனங்களை அனுமதிக்கலாம் என்ற பரிந்துரை மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் மற்றும் துணை கவர்னர் விரால் ஆச்சார்யா ஆகியோர் தெரிவித்துள்ளனர். தற்போது இந்த விவகாரத்தில் மத்திய அரசை ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

வங்கி துறையில் பெருநிறுவனங்கள்.. மக்களின் சேமிப்பு நேரடியாக பெருநிறுவனங்களுக்கு செல்லும்.. ராகுல் காந்தி தாக்கு
ரகுராம் ராஜன், விரால் ஆச்சார்யா

இது தொடர்பாக ராகுல் காந்தி டிவிட்டரில், காலவரிசையை புரிந்து கொள்ளுங்கள், முதலில் சில பெரிய நிறுவனங்களுக்கு கடன் மன்னிப்பு. அடுத்து, பெரிய நிறுவனங்களுக்கு பெரிய அளவில் வரி குறைப்பு. தற்போது அதே நிறுவனங்களால் அமைக்கப்படும் வங்கிகளில் மக்களின் சேமிப்பு நேரடியாக கொடுங்கள் என்று பதிவு செய்து இருந்தார். அதாவது பெருநிறுவனங்களுக்கு ஆதரவாக மோடி அரசு தொடர்ந்து செயல்படுவதாக ராகுல் காந்தி மறைமுகமாக குற்றம் சாட்டியுள்ளார்.