சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம் : தொகுதி பங்கீடு குறித்து இன்று ராகுல்காந்தி ஆலோசனை!

சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம் : தொகுதி பங்கீடு குறித்து இன்று ராகுல்காந்தி ஆலோசனை!

சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஆளும் அரசான அதிமுகவும், எதிர்கட்சியான திமுகவும் ஆட்சியை பிடித்தே ஆகவேண்டும் என முனைப்பு காட்டி வருகின்றன. அண்மையில் தமிழகம் வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைக்கும் என்பதை உறுதிப்படுத்தினார். அரசுமுறை பயணமாக அவர் தமிழகம் வந்திருந்தாலும், அவரது பேச்சு முழுவதுமே தேர்தல் குறித்து தான் இருந்தது.

சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம் : தொகுதி பங்கீடு குறித்து இன்று ராகுல்காந்தி ஆலோசனை!

இதே போல, திமுகவும் தேர்தல் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகின்றன. இந்த நிலையில், தமிழக சட்டமன்றத் தேர்தல் குறித்து ராகுல்காந்தி இன்று ஆலோசனை நடத்தவிருக்கிறார். காணொளி வாயிலாக நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் கே.எஸ். அழகிரி, தினேஷ் குண்டுராவ் உள்ளிட்ட முக்கிய காங்கிரஸ் பிரமுகர்கள் பங்கேற்கவிருப்பதாக தெரிகிறது. அந்த கூட்டத்தில், தொகுதி பங்கீடு குறித்து பேசவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.

சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம் : தொகுதி பங்கீடு குறித்து இன்று ராகுல்காந்தி ஆலோசனை!

அண்மையில் பேசிய தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் குண்டுராவ், தொகுதிக்காக திமுகவுடன் பேரம் பேசமாட்டோம் என்றும் தொகுதி பங்கீடு குறித்து வெளிப்படையான பேச்சு வார்த்தை தான் நடத்தப்படும் என்றும் கூறியிருந்தார் என்பது நினைவு கூரத்தக்கது.