அரசியலமைப்பு அடிப்படையில் மக்களின் குரலுடன் ஜனநாயகம் இயங்கும்.. மத்திய அரசை தாக்கிய ராகுல் காந்தி

அரசியலமைப்பு அடிப்படையில் மக்களின் குரலுடன் ஜனநாயகம் இயங்கும்.. மத்திய அரசை தாக்கிய ராகுல் காந்தி

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட்டுக்கும் இடையிலான மோதல் காரணமாக காங்கிரஸ் அரசு நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. ராஜஸ்தான் அரசை பா.ஜ.க. கவிழ்க்க முயற்சி செய்வதாக முதல்வர் அசோக் கெலாட் பகிரங்கமாக குற்றம் சாட்டி வருகிறார். மேலும் , பா.ஜ.க. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை சீர்குலைக்க எல்லாவற்றையும் மேற்கொள்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்திரதன்மைக்கு கவர்னர் அலுவலகத்தை பா.ஜ.க. தவறாக பயன்படுத்துகிறது என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

அரசியலமைப்பு அடிப்படையில் மக்களின் குரலுடன் ஜனநாயகம் இயங்கும்.. மத்திய அரசை தாக்கிய ராகுல் காந்தி

இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு நாடு முழுவதுமாக உள்ள கவர்னர் அலுவலகங்களின் முன்பு, பா.ஜ.க.வின் ஆட்சி கவிழ்ப்பு முயற்சிகளை கண்டித்து ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள், அரசியலமைப்பை காப்பாற்றுங்கள் போராட்டத்தை காங்கிரஸ் கட்சியினர் நடத்த உள்ளனர். இந்த போராட்டத்துக்கு முன்னதாக நேற்று காலை 10 மணி முதல் ஆன்லைனில் ஜனநாயகத்துக்காக பேசுங்கள் பிரச்சாரத்தை காங்கிரஸ் தொடங்கியது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர்கள் தங்களது சமூக வலைதள கணக்குகளில் ‘#SpeakUpForDemocracy’ என்ற ஹேஸ்டேக்கில் தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர்.

அரசியலமைப்பு அடிப்படையில் மக்களின் குரலுடன் ஜனநாயகம் இயங்கும்.. மத்திய அரசை தாக்கிய ராகுல் காந்தி

ராஜஸ்தான் அரசியல் நெருக்கடி தொடர்பாக மத்திய அரசை காங்கிரசின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக தாக்கியுள்ளார். அவர் டிவிட்டரில், இந்தியாவின் ஜனநாயகம் அரசியலமைப்பின் அடிப்படையில் மக்களின் குரலுடன் இயங்கும். பா.ஜ.க.வின் மோசடி சதியை மறுப்பதன் மூலம் நாட்டின் மக்கள் ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் பாதுகாப்பார்கள். #SpeakUpForDemocracy என பதிவு செய்து இருந்தார்.