காந்தி ஜெயந்தி வரைதான்… ஆணவத்தை விட்டு விடுங்க… மோடியை எச்சரிக்கும் ராகுல் காந்தி

 

காந்தி ஜெயந்தி வரைதான்… ஆணவத்தை விட்டு விடுங்க… மோடியை எச்சரிக்கும் ராகுல் காந்தி

காந்தி ஜெயந்திக்குள் ஆணவத்தை விட்டு விட்டு வேளாண் சட்டங்களை ரத்து செய்யுங்க என்று பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லியின் பல எல்லைகளில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளின் போராட்டம் 72 நாட்களை தாண்டி விட்டது. இந்நிலையில், விவசாய சங்க தலைவர் டிக்கைட் கூறுகையில், அக்டோபர் 2ம் தேதி வரை டெல்லியில் எல்லைகளில் தொடர்ந்து அமர்ந்து இருப்போம். வேளாண் சட்டங்களை மத்திய அரசு ரத்து செய்தால் மட்டுமே விவசாயிகள் வீடுகளுக்கு திரும்புவர் என்று தெரிவித்தார். இந்நிலையில் பிரதமர் மோடிக்கு, விவசாயிகளின் கோரிக்கை நினைவுப்படுத்தும் வகையில் ராகுல் காந்தி டிவிட்டரில் செய்தி பதிவு செய்துள்ளார்.

காந்தி ஜெயந்தி வரைதான்… ஆணவத்தை விட்டு விடுங்க… மோடியை எச்சரிக்கும் ராகுல் காந்தி
விவசாயிகள் போராட்டம் (கோப்புப்படம்)

ராகுல் காந்தி டிவிட்டரில், காந்தி ஜெயந்தி வரை விவசாயிகள் மற்றும் இயக்கத்தின் தொண்டர்கள் உறுதியுடன், அவர்களின் உறுதியுடன், மோடி அரசாங்கத்தின் மீது அவர்களுக்கு எவ்வளவு நம்பிக்கை உள்ளது என்பது தெளிவாகிறது. ஆணவத்தை விட்டு விடுங்கள். சத்தியாகிராஹி விவசாயிகளின் துன்பத்தை கருத்தில் கொண்டு விவசாய எதிர்ப்பு சட்டத்தை வாபஸ் பெறுங்கள் என்று பதிவு செய்து உள்ளார்.

காந்தி ஜெயந்தி வரைதான்… ஆணவத்தை விட்டு விடுங்க… மோடியை எச்சரிக்கும் ராகுல் காந்தி
பிரதமர் மோடி

கடந்த சனிக்கிழமையன்று வேளாண் சட்டங்கள் தொடர்பாக ராகுல் காந்தி டிவிட்டரில், நாட்டுக்கு உணவு அளிப்பவர்களின் அமைதியான சத்தியாக்கிரகம் தேசிய நலன் உள்ளது. ஆனால் 3 சட்டங்களும் விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் மட்டுமல்ல மக்களுக்கும் நாட்டுக்கும் ஆபத்தானவை. முழு ஆதரவு என பதிவு செய்து இருந்தார்.