சீன அத்துமீறலை ஒப்புக்கொண்ட பாதுகாப்பு துறை அமைச்சகம்.. பிரதமர் மோடி ஏன் பொய் சொல்கிறார்?.. ராகுல் தாக்கு

சீன அத்துமீறலை ஒப்புக்கொண்ட பாதுகாப்பு துறை அமைச்சகம்.. பிரதமர் மோடி ஏன் பொய் சொல்கிறார்?.. ராகுல் தாக்கு

கடந்த மே மாதம் சீன ராணுவம் இந்திய எல்லையில் ஊடுருவ முயற்சி செய்தது. இதன் உச்ச கட்டமாக கடந்த ஜூன் 15ம் தேதியன்று கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் எல்லை கட்டுப்பாட்டு பகுதியை தாண்டி இந்திய எல்லைக்குள் சீன வீரர்கள் ஊடுருவ முயன்றனர். இதனை இந்திய ராணுவ வீரர்கள் தடுத்து அவர்களை விரட்டினர் அப்போது ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இதனையடுத்து இந்திய பகுதியை சீன ராணுவம் ஆக்கிரமித்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அடிக்கடி கூறி வந்தார். ஆனால் பிரதமர் மோடியோ இந்திய நிலப்பகுதியை யாரும் ஆக்கிரமிக்கவில்லை என தெரிவித்தார். ஆனால் ராகுல் காந்தி இந்திய நிலப்பகுதியை சீன ராணுவம் ஆக்கிரமித்துள்ளதாக தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தார்.

சீன அத்துமீறலை ஒப்புக்கொண்ட பாதுகாப்பு துறை அமைச்சகம்.. பிரதமர் மோடி ஏன் பொய் சொல்கிறார்?.. ராகுல் தாக்கு

இந்த சூழ்நிலையில், பாதுகாப்பு துறை அமைச்சகம் தனது வெப்சைட்டில் அறிக்கையை பதிவேற்றம் செய்து இருந்தது. சீன படையினரின் அத்துமீறல்கள் குறித்து ராஜ்ராத் சிங் தலைமையிலான பாதுகாப்பு துறை அமைச்சகம் முதல் முறையாக ஒப்புக்கொண்டுள்ளது. அந்த அறிக்கையில், 2020 மே 5 முதல் எல்லை கட்டுப்பாட்டு பகுதி மற்றும் குறிப்பாக கல்வான் பள்ளதாக்கில் சீன ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது. அந்த மாதம் 17 மற்றும் 18ம் தேதிகளில் குக்ராங் நாலா,கோக்ரா மற்றும் பாங்காங் த்சோ ஏரியின் வடக்கு கரையோரங்களில் சீன தரப்பு மீறியது என பாதுகாப்பு அமைச்சகம் தனது ஜூன் மாத நடவடிக்கைகள் தொடர்பான தனது ஆவணத்தில் தெரிவித்துள்ளது.

சீன அத்துமீறலை ஒப்புக்கொண்ட பாதுகாப்பு துறை அமைச்சகம்.. பிரதமர் மோடி ஏன் பொய் சொல்கிறார்?.. ராகுல் தாக்கு

தற்போது அந்த ஆவணத்தை குறிப்பிட்டு பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். ராகுல் காந்தி டிவிட்டரில், பிரதமர் ஏன் பொய் சொல்கிறார்? என பதிவு செய்து இருந்தார். மேலும், பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் ஆவணம் குறித்து செய்தியான முன்னணி ஆங்கில பத்திரிகையின் கட்டுரையையும் அதில் பதிவு செய்து இருந்தார்.