தொற்று, பணவீக்கம், வேலையின்மை.. யார் பொறுப்பு.. ராகுல் காந்தி கேள்வி

தொற்று, பணவீக்கம், வேலையின்மை.. யார் பொறுப்பு.. ராகுல் காந்தி கேள்வி

தொற்று, பணவீக்கம் மற்றும் வேலையின்மைக்கு யார் பொறுப்பு என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

நாட்டின் பொருளாதார மந்தநிலை, இந்திய-சீன எல்லை விவகாரம், வேலையின்மை மற்றும் தொற்றுநோய் நிர்வாகம் உள்பட பல்வேறு விஷயங்களில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசை வயநாடு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்.

தொற்று, பணவீக்கம், வேலையின்மை.. யார் பொறுப்பு.. ராகுல் காந்தி கேள்வி
பணவீக்கம்

இந்நிலையில் நேற்று, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில், தொற்று, பணவீக்கம், வேலையின்மை அனைத்தையும் பார்த்த பிறகும் அமைதியாக அமர்ந்திருப்பவர், நாட்டை பற்றி மக்களுக்கு தெரியும். யார் பொறுப்பு என்று பதிவு செய்து இருந்தார்.

தொற்று, பணவீக்கம், வேலையின்மை.. யார் பொறுப்பு.. ராகுல் காந்தி கேள்வி
குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரான உலக தினம்

முன்னதாக குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரான உலக தினத்தை முன்னிட்டு மற்றொரு டிவிட்டில், குழந்தைகளே எதிர்காலம். அவர்கள் கல்வி, ஆரோக்கியம் மற்றும் புன்னைக்கு தகுதியானவர்கள். ஒவ்வொரு நாளும் உருவாக்குவோம் என்று பதிவு செய்து இருந்தார்.