பெட்ரோல் விலை உயர்த்தி மக்கள் பைகளை காலி செய்து நண்பர்களுக்கு கொடுக்கும் மோடி அரசு.. ராகுல் காந்தி தாக்கு

பெட்ரோல் விலை உயர்த்தி மக்கள் பைகளை காலி செய்து நண்பர்களுக்கு கொடுக்கும் மோடி அரசு.. ராகுல் காந்தி தாக்கு

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையை உயர்த்தி மக்களின் பைகளை காலி செய்து அதை தனது நண்பர்களுக்கு மோடி அரசு கொடுக்கிறது என ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது சர்வதேச சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 105 டாலர் என்ற அளவில் இருந்தது. ஆனால் அப்போதும் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை சுமார் ரூ.75 என்ற அளவில்தான் இருந்தது. ஆனால் தற்போது சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் 65 டாலருக்கும் குறைவாக உள்ளது. அதேசமயம் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை சுமார் ரூ.93ஆக உள்ளது.

பெட்ரோல் விலை உயர்த்தி மக்கள் பைகளை காலி செய்து நண்பர்களுக்கு கொடுக்கும் மோடி அரசு.. ராகுல் காந்தி தாக்கு
பெட்ரோல் பங்கு

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைவதற்கு பதிலாக அதிகரிப்பதற்கு காரணம் மத்திய அரசு அவற்றின் மீதான கலால் வரியை அதிகரித்ததே காரணம். பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள் விலை உயர்வால் பாதிக்கப்படபோவது சாமானிய மக்கள்தான். இதனால் எரிபொருள் மீதான கலால் வரியை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசை எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த சூழ்நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை குறிப்பிட்டு பிரதமர் மோடி தலைமையிலான அரசை ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

பெட்ரோல் விலை உயர்த்தி மக்கள் பைகளை காலி செய்து நண்பர்களுக்கு கொடுக்கும் மோடி அரசு.. ராகுல் காந்தி தாக்கு
பிரதமர் மோடி

ராகுல் காந்தி டிவிட்டரில், பெட்ரோல் பம்பில் காரில் எரிபொருள் நிரப்பும்போது, வேகமாக உயரும் மீட்டரை பார்க்கும்போது கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கவில்லை, ஆனால் குறைந்து விட்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100. உங்கள் பைகளை காலி செய்து நண்பர்களுக்கு கொடுக்கும் ஒரு பெரிய வேலையை மோடி அரசு செய்து வருகிறது என்று பதிவு செய்து இருந்தார்.