உங்களின் கனவு நிச்சயம் நிறைவேறும்! ரஜினிக்கு ராகவா லாரன்ஸ் வாழ்த்து

 

உங்களின் கனவு நிச்சயம் நிறைவேறும்! ரஜினிக்கு ராகவா லாரன்ஸ் வாழ்த்து

கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் ரசிகர்களுடனான சந்திப்பின்போது தான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும் போர் வரும் போது களம் காணுவோம் எனவும் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, அவரது ரசிகர் மன்றம் ரஜினி மக்கள் மன்றம் என பெயர் மாற்றப்பட்டது. தொடர்ந்து மாவட்ட நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டனர். ஆனால் அதன்பிறகு ரஜினி அரசியல் யுத்தத்திற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கட்சியும் தொடங்கவில்லை. இதனால் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன் ரஜினியின் ஆன்மீக அரசியலில் தானும் இணையப்போவதாகவும் எதிர்வினை ஆற்றாமல் யாரையும் புண்படுத்தாமல் கட்சி ஆரம்பிப்பது என்னுடைய குரு ரஜினிகாந்த் மட்டுமே என நடிகர் லாரன்ஸ் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பது உறுதி என கூறியிருக்கிறார்.

உங்களின் கனவு நிச்சயம் நிறைவேறும்! ரஜினிக்கு ராகவா லாரன்ஸ் வாழ்த்து

ரஜினி நீண்டகாலமாகவே அரசியலுக்கு அழைத்துக் கொண்டிருந்த நடிகர் ராகவா லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “மிக்க நன்றி தலைவா!நீங்கள் கட்சி ஆரம்பிக்கும் செய்தியை கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்று காத்திருக்கும் ஏராளமான ரசிகர்களில் நானும் ஒருவன். உங்கள் லட்சியம் நிறைவேற நான் ராகவேந்திராவிடம் பிரார்த்திப்பேன். கொரோனா சூழலில் உங்கள் உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் மக்களுக்காக சேவையாற்ற வந்துள்ள உங்களின் கனவு நிச்சயம் நிறைவேறும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.