இன்று பிற்பகல் இந்தியா வருகிறது ரஃபேல்! – ஏற்பாடுகள் தீவிரம்

 

இன்று பிற்பகல் இந்தியா வருகிறது ரஃபேல்! – ஏற்பாடுகள் தீவிரம்

இன்று பிற்பகல் ரஃபேல் போர் விமானங்கள் ஹரியானா மாநிலத்தில் உள்ள அம்பாலா விமானப்படைத் தளத்துக்கு வந்து சேருகின்றன. இதைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
பிரான்சிடமிருந்து இந்தியா ரஃபேல் போர் விமானங்களை வாங்கியுள்ளது. முதல் கட்டமாக ஐந்து ரஃபேல் போர் விமானங்களை பிரான்ஸ் வழங்கியது. இதை இந்திய விமானப்படை வீரர்கள் பிரான்சில் இருந்து பெற்றுக்கொண்டு நாடு திரும்பி வருகின்றனர்.

இன்று பிற்பகல் இந்தியா வருகிறது ரஃபேல்! – ஏற்பாடுகள் தீவிரம்
வரும் வழியில் விமானத்துக்கு தேவையான எரிபொருள் பிரான்ஸ் டேங்கர் விமானம் மூலம் நிரப்பப்பட்டது. 7000 கி.மீ பயணத்தை நிறைவு செய்து இன்று பிற்பகல் விமானம் அம்பாலா விமானப்படைத் தளத்துக்கு வருகிறது. விமானத்தை இந்திய விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ்.பதாரியா வரவேற்கிறார்.

இன்று பிற்பகல் இந்தியா வருகிறது ரஃபேல்! – ஏற்பாடுகள் தீவிரம்
இதைத் தொடர்ந்து அம்பாலாவில் விமானப்படை தளம் அமைந்துள்ள பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் பொது இடங்களில் கூட, புகைப்படம், வீடியோ எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. விமானப்படைத் தளத்தைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வீட்டின் மாடி, கூரைகள் மீது ஏறி புகைப்படம் எடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.