ஒரே நாளில் 3.79 லட்சம் பேருக்கு தடுப்பூசி – சுகாதாரத்துறை செயலாளர் தகவல்!

 

ஒரே நாளில் 3.79 லட்சம் பேருக்கு தடுப்பூசி – சுகாதாரத்துறை செயலாளர் தகவல்!

நாடெங்கிலும் கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து மாநில அரசுகளும் மூன்றாவது அலைக்குள் தடுப்பூசியை செலுத்திட மும்முரம் காட்டி வருகிறார்கள். அதற்கு ஏற்றாற்போல மக்களிடையேயும் ஆர்வம் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் மட்டும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

ஒரே நாளில் 3.79 லட்சம் பேருக்கு தடுப்பூசி – சுகாதாரத்துறை செயலாளர் தகவல்!

ஆனால், தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதால் தடுப்பூசி செலுத்தும் பணியில் அவ்வப்போது தொய்வு ஏற்படுகிறது. தடுப்பூசிகள் இல்லாமல் சில நாட்களில் மையங்கள் மூடப்படுவதால் வரிசையில் காத்துக் கிடக்கும் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பச் செல்கின்றனர். இத்தகைய சூழலில், தமிழகத்திற்கு இன்று ஒரு லட்சம் கோவாக்சின் வருவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இன்று மாலை அவை சென்னை வந்தடைந்ததும் பிற மாவட்டங்களுக்கு பிரித்து வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 3.79 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மூன்றாவது அலையை தடுக்க மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டியது கட்டாயம் என்றும் கூறினார்.