தமிழகத்திற்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்- தமிழக அரசு

 

தமிழகத்திற்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்- தமிழக அரசு

பிரிட்டனில் புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதையடுத்து எந்த நாடுகளிலிருந்து தமிழகம் வந்தாலும் அந்த பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் நடத்தவேண்டுமென தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்- தமிழக அரசு

சென்னை விமான நிலையத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். அதன்பின் பேசிய அவர், “பிரிட்டனில் இருந்து மட்டுமின்றி அனைத்து நாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு பரிசோதனை செய்யப்படும். சோதனையில் நெகடிவ் என்றால் தனிமைப்படுத்தப்படுவர், பாசிடிவ் என்றால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவர். பணம் கொடுத்து தங்க தமிழக அரசு சார்பில் விடுதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பிரிட்டனிலிருந்து வருவோர் இனி நேரடியாக வீடு செல்ல முடியாது. பிரிட்டனிலிருந்து வரும் பயணிகள் அனைவருக்கும் 7 நாட்கள் தனிமைப்படுத்துதல் கட்டாயம். பிரிட்டனில் கோவிட் உருமாற்றமடைந்து வீரியமாக இருப்பதன் காரணமாக மத்திய அரசு இதுபோன்ற உத்தரவை பிறப்பித்துள்ளது. வரும் 31 ஆம் தேதி வரை இம்முறை தொடரும். சென்னை, திருச்சி, மதுரை, கோவை என அனைத்து விமான நிலையங்களிலும் இம்முறை பின்பற்றப்படும்” எனக் கூறினார்.

இதேபோல் கர்நாடகா, பெங்களூரு, மங்களூரு விமான நிலையம் வழியாக பிரிட்டனிலிருந்து டிசம்பர் 7 ஆம் தேதி முதல் இந்தியா திரும்பியவர்களின் பட்டியலை பெற்று பரிசோதனை செய்யவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.