சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், நாகை, தஞ்சாவூருக்கு கொரோனா ரெட் அலர்ட்- ராதாகிருஷ்ணன்

 

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், நாகை, தஞ்சாவூருக்கு கொரோனா ரெட் அலர்ட்- ராதாகிருஷ்ணன்

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருண்ணன், “அனைத்து மாவட்டங்களிலும் தயார் நிலையில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவலை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. இருப்பினும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், நாகை, தஞ்சாவூருக்கு கொரோனா ரெட் அலர்ட்- ராதாகிருஷ்ணன்

சென்னையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 11 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்று உறுதி செய்யப்படுவதில், இந்திய அளவில் ஒப்பிடும்போது தமிழகத்தில் பாதிப்பு அளவு 3 சதவீதம்தான். சென்னையில் 15 மண்டலங்களிலும் களப் பணியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். கொரோனா நோயாளிகள் அதிகரித்திருப்பதால், சென்னையில் மீண்டும் தனிமைப்படுத்தும் முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன. சென்னையில் உள்ள விக்டோரியா மாணவர் விடுதியில் 570 படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், நாகை, தஞ்சாவூரில் தொற்று பரவல் அதிகமாக உள்ளது.

பொதுமக்கள் முகக்கவசம் அணிவதைத்தவிர வேறு வழியில்லை. சென்னை மற்றும் ராணிப்பேட்டையில் கொரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. கொரோனா அறிகுறி தென்பட்டால் உடனடியாக மருத்துவமனையை அணுகவும்” என தெரிவித்தார்.