பிரபல ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநரான ஆர்.வேல்ராஜின் தந்தை காலமானார்!

 

பிரபல ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநரான ஆர்.வேல்ராஜின் தந்தை காலமானார்!

பிரபல ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநரான ஆர்.வேல்ராஜ். தமிழ், மலையாளம், ஹிந்தி திரைப்படங்களில் பணியாற்றி வருகிறார். இவர் தமிழில் பொல்லாதவன், ஆடுகளம், சிறுத்தை, வட சென்னை உள்ளிட்ட பல சிறந்த படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். அதே போல, வேலையில்லா பட்டதாரி மற்றும் தங்க மகன் ஆகிய படங்களையும் இயக்கியுள்ளார்.

பிரபல ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநரான ஆர்.வேல்ராஜின் தந்தை காலமானார்!

இவரது தந்தை எஸ்.ராஜாமணி(99). மதுரை கூத்தியார்குண்டை சேர்ந்தவரான இவர் கடந்த சில காலமாக உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் வயது மூப்பு காரணமாக இன்று மதியம் 1.45 மணியளவில் காலமானார். இவரது உடல் நாளை தகனம் செய்யப்பட உள்ளது. இவரது மறைவுக்கு திரையுலகினர் பலர் அஞ்சலி செலத்தி வருகின்றனர்.