Home விளையாட்டு கிரிக்கெட் "அப்படி சொல்லாதடா சாரி… மனசுலாம் வலிக்கறது" - 'அம்பியாக' மாறி மஞ்ச்ரேக்கரை கலாய்த்த அஸ்வின்!

“அப்படி சொல்லாதடா சாரி… மனசுலாம் வலிக்கறது” – ‘அம்பியாக’ மாறி மஞ்ச்ரேக்கரை கலாய்த்த அஸ்வின்!

சஞ்சய் மஞ்சரேக்கர் கிரிக்கெட் விளையாடிய காலக்கட்டத்தில் பெரிதாக எதையும் சாதிக்காவிட்டாலும், இப்போது ஆப் ஸ்கிரீனில் யாரையும் விட்டுவைக்காமல் விமர்சனம் செய்வார். மும்பை வீரர்கள் மட்டுமே இவரது கண்களுக்கு உலகிலேயே மிகச் சிறந்த வீரர்களாக தெரிவார்கள். மற்ற வீரர்கள் எல்லாம் அவருக்கு பொழுதுபோக்குக்காக கிரிக்கெட் விளையாடுபவர்களாகவே தெரிவார்கள். இவருக்கும் ஜடேஜாவுக்கும் இருக்கும் பனிப்போர் அனைவரும் அறிந்ததே.

"அப்படி சொல்லாதடா சாரி… மனசுலாம் வலிக்கறது" - 'அம்பியாக' மாறி மஞ்ச்ரேக்கரை கலாய்த்த அஸ்வின்!
Ravichandran Ashwin Responds After Sanjay Manjrekar Says He Isn't An  "All-Time Great"

தற்போது அஸ்வினிடம் ஒரண்டை இழுத்திருக்கிறார். சமீபத்தில் பேட்டியளித்த சஞ்சய் மஞ்சரேக்கர், “அஸ்வினை சிறப்பு வாய்ந்த பந்துவீச்சாளராக தான் கருதவில்லை. தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் அஸ்வின் இதுவரை ஒரு முறை கூட ஒரு போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தவில்லை என்பதே அதற்குக் காரணம். அவர் சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமான இந்திய களங்களில்தான் (Home Track Bully) அதிக விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இதனால் தான் அஸ்வினை கிரிக்கெட் உலகின் என்றும் சிறப்பு வாய்ந்த பந்துவீச்சாளராக என்னால் பாராட்ட முடியவில்லை” என்றார்.

Sanjay Manjrekar responds after a fan calls Ravindra Jadeja the best Indian  all-rounder after Kapil Dev

இதோடு நில்லாமல் இதுதொடர்பாக ட்வீட் செய்திருந்த அவர், “All-Time Great என்பது ஒரு கிரிக்கெட் வீரருக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த பாராட்டு. டான் பிராட்மேன், சோபர்ஸ், கவாஸ்கர், டெண்டுல்கர், விராட் போன்ற கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் All-Time Great என்ற எனது பாராட்டுக்குரிய ஜாம்பவான்கள். ஆனால் அஸ்வின் இன்னும் என்னுடைய லிஸ்டில் இணையவில்லை” என்று பதிவிட்டிருந்தார்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அஸ்வின் அவரது ட்வீட்டை ரீட்வீட் செய்த அஸ்வின், அந்நியன் அம்பி மீமை ஷேர் செய்து கலாய்த்துள்ளார். அதில் பேமஸான மீம் டெம்ப்ளெட்டான “அப்படி சொல்லதடா சாரி… மனசெல்லாம் வலிக்கிறது” என்பதைப் பகிர்ந்துள்ளார்.

"அப்படி சொல்லாதடா சாரி… மனசுலாம் வலிக்கறது" - 'அம்பியாக' மாறி மஞ்ச்ரேக்கரை கலாய்த்த அஸ்வின்!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

பஞ்சாப் காங்கிரஸை வேறு யாராவது பலப்படுத்த முடியுமானால் என்னை நீக்குங்க.. சுனில் ஜாகர்

பஞ்சாப் காங்கிரஸை வேறு யாராவது பலப்படுத்த முடியுமானால் என்னை தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று நான் ஆரம்பம் முதலே சொல்லி வருகிறேன் என சுனில் ஜாகர் தெரிவித்தார்.

பீகார் பா.ஜ.க. கூட்டணிக்குள் விரிசல்?.. ஜிதன் ராம் மாஞ்சியுடன் லாலு பிரசாத் மூத்த மகன் ரகசிய சந்திப்பு

பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஜிதன் ராம் மாஞ்சியை, ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ்...

கடவுளின் அவதாரம் அழைத்துக்கொள்ளும் சிவசங்கருக்கு மீண்டும் சம்மன்

கடவுளின் அவதாரம் என தன்னை அழைத்துக் கொள்ளும் சிவசங்கர் பாபா மீது எழுந்த பாலியல் குற்றச்சாட்டு குறித்த விசாரணைக்காக அவருக்கு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.

காஷ்மீர் விவகாரம்.. திக்விஜய சிங் பேசிய ஆடியோவை வெளியிட்ட பா.ஜ.க… சிக்கலில் காங்கிரஸ்

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் காஷ்மீரின் 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டதை மறுபரிசீலனை செய்யும் என்று அந்த கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய சிங், பாகிஸ்தான் செய்தியாளரிடம் பேசிய ஆடியோ ஒன்றை...
- Advertisment -
TopTamilNews