டிக்டாக் செயலிக்கு மாற்றாக வருகிறது ” Q TOK “

 

டிக்டாக் செயலிக்கு மாற்றாக வருகிறது ” Q TOK “

இந்தியாவில் அதிக பயனர்களை கொண்டிருந்த டிக்டாக் செயலி, இந்திய இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது என மத்திய அரசு தடை செய்தது.
சமூக வலைதளங்களில் பலரின் திறமையை வெளிக்காட்ட முக்கிய தளமாக டிக்டாக் இருந்தது. இந்த நிலையில், அதற்கு தடை விதிக்கப்பட்ட பிறகு கூகுள் பிளே ஸ்டோரில் இருந்தும் டிக்டாக் நீக்கப்பட்டது.
இந்த நிலையில், டிக்டாக் செயலிக்கு நிகராக, கொச்சியை சேர்ந்த ஸ்டூடியோ 90 Innovations Private limited என்ற நிறுவனம், ” கியூ டாக்”
(Q TOK) என்ற செயலியை சில நாட்களுக்கு முன்பு அறிமுகம் செய்துள்ளது.

டிக்டாக் செயலிக்கு மாற்றாக வருகிறது ” Q TOK “

டிக்டாக் செயலி போன்ற அதே வடிவில் கியூடாக் உருவாக்கப்பட்டுள்ளது. இதுவரை கேரளாவில் மட்டுமே 50 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர்.
கியூடாக் செயலி குறித்து, அதன் தலைவர் தீப்பூ R.சசிதரன் கூறுகையில்,

டிக்டாக் தடைக்கு முன்பே எங்களது ” QTOK ” செயலியின் முதற்கட்ட வேலையை துவங்கியிருந்தோம். டிக்டாக் செயலியைவிட நிறைய அம்சங்களை அதில் சேர்க்க முடிவு செய்த்திருந்தோம் அனால் டிக்டாக் தடையினால் எங்கள் முடிவில் சில திருத்தங்களை செய்தோம் டிக்டாக் செயலியில் இருப்பது போலவே அதன் அம்சங்களை கொண்டே உருவாக்கி விட்டோம்.
இந்த செயலின் மூலம் பயன்பாட்டாளர்கள் நேரலையாக வீடியோக்களை 30 வினாடிக்கு குறைவாகவும் மற்றும் 5 நிமிடத்திற்கு குறைவாகவும் பதிவேற்றம் செய்ய முடியும்.

டிக்டாக் செயலிக்கு மாற்றாக வருகிறது ” Q TOK “

விளம்பரம் மற்றும் அதன் வீடியோக்களை தரவிறக்கும் விதமாக , வீடியோவின் நீளத்தை ஒரு நிமிடத்திற்கு குறைத்துள்ளோம் மற்றும் நேரலை வீடியோவை 45 வினாடிக்கு உயர்த்தி உள்ளோம் என்கிறார்.

டிக்டாக் போன்ற வெளிநாட்டு நிறுவன செயலிகளுக்கு பதில் உள்நாட்டு இளைஞர்கள் உருவாக்கிய இந்த Q TOK செயலி மக்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.