‘வேற லெவல் ஆட்டம்’… அரையிறுதி சுற்றுக்கு முன்னேற்றினார் பி.வி.சிந்து!

 

‘வேற லெவல் ஆட்டம்’… அரையிறுதி சுற்றுக்கு முன்னேற்றினார் பி.வி.சிந்து!

ஒலிம்பிக் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியில் வெற்றி பெற்று இந்தியாவின் பி.வி சிந்து அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

‘வேற லெவல் ஆட்டம்’… அரையிறுதி சுற்றுக்கு முன்னேற்றினார் பி.வி.சிந்து!

ஜப்பானில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி 2020 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 49 கிலோ பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை வென்று கொடுத்தார் மீராபாய் சானு. இதை தொடர்ந்து, குத்துச்சண்டை பிரிவில் காலிறுதிப் போட்டியில் வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி இந்தியாவுக்கு மற்றொரு பதக்கத்தை உறுதி செய்தார் லவ்லினா.

‘வேற லெவல் ஆட்டம்’… அரையிறுதி சுற்றுக்கு முன்னேற்றினார் பி.வி.சிந்து!

இந்த நிலையில், ஒலிம்பிக் மகளிர் பேட்மிட்டன் ஒற்றையர் பிரிவில் காலிறுதி ஆட்டத்தில் ஜப்பான் வீராங்கனை அகேன் யமாகுச்சியை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு இந்தியாவின் பிவி சிந்து முன்னேறியுள்ளார். முதல் செட்டில் அதிரடியாக விளையாடிய சிந்து 11-7, 21-13 என்ற கணக்கில் தொடர்ந்து முன்னிலை வகித்தார். இரண்டாவது செட்டில் ஜப்பான் வீராங்கனை அதிரடி காட்ட தொடங்கியதால்14-8, 15- 14, 20 – 20 என ஆட்டம் விறுவிறுப்பாக மாறியது. வெற்றி யார் பக்கம் என அரங்கமே எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் 21-13, 22-20 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று பி.வி சிந்து அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இந்தியாவுக்கு சிந்து மற்றொரு பதக்கத்தை பெற்றுத் தருகிறாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.