அதிமுகவுக்கு குட்பை; தெம்பாக ஒட்டப்பிடாரத்தை குறிவைத்த கிருஷ்ணசாமி

 

அதிமுகவுக்கு குட்பை; தெம்பாக ஒட்டப்பிடாரத்தை குறிவைத்த கிருஷ்ணசாமி

வருகின்ற 2021 சட்டப்பேரவை தேர்தலில் ஒட்டப்பிடாரத்தில் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார்.

அதிமுகவுக்கு குட்பை; தெம்பாக ஒட்டப்பிடாரத்தை குறிவைத்த கிருஷ்ணசாமி

சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அதிமுக -திமுக ஆகிய இரு கட்சிகளும் தொகுதி பங்கீடு, வேட்பாளர் பட்டியல் ,தேர்தல் அறிக்கை என அடுத்தடுத்த நடவடிக்கைகளில் அதிரடியாக மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று முன்தினம் திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியானது .அதில் கல்விக்கடன் ரத்து, இல்லத்தரசிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, 75% தமிழக மக்களுக்கு வேலை வாய்ப்பு உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அதேபோல அதிமுக தேர்தல் அறிக்கையிலும் வீட்டுக்கு இலவச வாஷிங் மெஷின், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, இல்லத்தரசிகளுக்கு மாதம் ஆயிரத்து 500 ரூபாய் ஊக்கத் தொகை என அதிரடி அறிவிப்புகள் வெளியாகின.

அதிமுகவுக்கு குட்பை; தெம்பாக ஒட்டப்பிடாரத்தை குறிவைத்த கிருஷ்ணசாமி

இந்நிலையில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய புதிய தமிழகம் கட்சி தனித்து போட்டியிட உள்ள நிலையில் 60 தொகுதிகளுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார் அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, முதற் கட்டமாக 60 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். அத்துடன் அவர் ஒட்டப்பிடாரத்தில் போட்டியிடப் போவதாகவும் அறிவித்தார் . ஏற்கனவே கிருஷ்ணசாமி 1996 ஆம் ஆண்டு ஒட்டப்பிடாரத்தில் தனித்து நின்று வெற்றி பெற்ற நிலையில் 2011ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக கூட்டணியில் ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.