“பெண்களுக்கு எதிரான குற்றங்களை செய்வோரின் போஸ்டர்களை சாலைகளில் வையுங்கள்” : முதல்வர் யோகி ஆதித்யநாத்

“பெண்களுக்கு எதிரான குற்றங்களை செய்வோரின் போஸ்டர்களை சாலைகளில் வையுங்கள்” : முதல்வர் யோகி ஆதித்யநாத்

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோரின் புகைப்படங்களை போஸ்டராக அடித்து சாலைகளில் வைக்க முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார் .

“பெண்களுக்கு எதிரான குற்றங்களை செய்வோரின் போஸ்டர்களை சாலைகளில் வையுங்கள்” : முதல்வர் யோகி ஆதித்யநாத்

உத்தரப்பிரேதத்தில் குற்ற சம்பவங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்கதையாகி உள்ளது. இதுபோன்ற குற்றங்களைத் தடுப்பதற்காக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அங்கு ஆன்டி ரோமியோ போலீஸ் படையை அமைத்து கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இருப்பினும் எந்த பலனும் இல்லை.

“பெண்களுக்கு எதிரான குற்றங்களை செய்வோரின் போஸ்டர்களை சாலைகளில் வையுங்கள்” : முதல்வர் யோகி ஆதித்யநாத்

இந்நிலையில் ஆபரேசன் துராசாரி என்ற திட்டத்தின் மூலம் பெண்களுக்கு எதிராகக் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் ஆசாமிகளின் புகைப்படங்களைப் பிரபல சாலை சந்திப்புகளில் வைக்கும்படி முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். அத்துடன் இதேபோன்ற நபர்களின் பின்புலத்தில் உள்ள செயல்படும் நபர்களையும் பொதுவெளியில் பகிரங்கப்படுத்தும்படி அவர் கூறியுள்ளார். இதன் மூலம் அங்கு ஈவ் டீசிங், பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட குற்றங்கள் குறையும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.