’ஐந்து ரூபாய் டாக்டர் பெயரை மெட்ரோ ஸ்டேஷன்னு சூட்டுங்கள்’ முதல்வருக்கு கோரிக்கை

 

’ஐந்து ரூபாய் டாக்டர் பெயரை மெட்ரோ ஸ்டேஷன்னு சூட்டுங்கள்’ முதல்வருக்கு கோரிக்கை

சென்னையின் புது அடையாளமாக மாறிவிட்டது மெட்ரோ ரயில்கள். போக்குவரத்து நெரிசல் மிகுந்த சென்னையில் குறித்த நேரத்தில் உரிய இடத்திற்குச் செல்ல பேருதவியாக இருப்பவை மெட்ரோ ரயில்கள்தாம்.

சென்னையில் ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் ” அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம்” என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்ட்ரல் மெட்ரோ நிலையம் “புரட்சி தலைவர் எம். ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ நிலையம்” என மாறியுள்ளது. மேலும் புறநகர் பேருந்து நிலையம் மெட்ரோ புரட்சி தலைவி டாக்டர் ஜெ. ஜெயலலிதா cmbt என மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

’ஐந்து ரூபாய் டாக்டர் பெயரை மெட்ரோ ஸ்டேஷன்னு சூட்டுங்கள்’ முதல்வருக்கு கோரிக்கை

இந்நிலையில் ஒரு மெட்ரோ ஸ்டேஷனுக்கு முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பெயரைச் சூட்டும்படி முதல்வருக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் மாநிலத் தலைவர் பொன்னுசாமி கோரிக்கை வைத்துள்ளார்.

அவரின் கோரிக்கையில், ’மறைந்த முன்னாள் முதல்வர்கள் அறிஞர் அண்ணாவின் பெயர்  சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கும், எம்ஜிஆரின் பெயர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கும் ஏற்கனவே சூட்டி கெளரவப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது அந்நிலையங்களுக்கு அருகில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு கூடுதலாக அவர்களின் பெயர்களையே சூட்டியிருப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

’ஐந்து ரூபாய் டாக்டர் பெயரை மெட்ரோ ஸ்டேஷன்னு சூட்டுங்கள்’ முதல்வருக்கு கோரிக்கை

சென்னை விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்திற்கு தமிழர்களின் பெருமையை உலகறியச் செய்திட்ட உன்னத மனிதர், தமிழகத்தின் கடைக்கோடியில் பிறந்து இந்தியாவின் முதல் குடிமகனாக உயர்ந்து, இளைஞர்களின் எழுச்சி நாயகனாக இன்றளவும் திகழ்ந்து கொண்டிருக்கும் ஐயா. அ.பெ.ஜெ.அப்துல்கலாம் அவர்களின் பெயரை சூட்ட வேண்டும்.

’ஐந்து ரூபாய் டாக்டர் பெயரை மெட்ரோ ஸ்டேஷன்னு சூட்டுங்கள்’ முதல்வருக்கு கோரிக்கை

வடசென்னை பகுதியில் சுமார் 45ஆண்டுகாலமாக ஏழை, எளிய மக்களிடம் வெறும் இரண்டு ரூபாயும், ஐந்து ரூபாயும் மட்டுமே கட்டணமாக பெற்றும், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு முற்றிலுமாக இலவசமாகவும் சிகிச்சை அளித்து சிறப்பான மருத்துவ சேவையாற்றி மருத்துவர்களுக்கெல்லாம் முன்னுதாரணமாக திகழ்ந்த மறைந்த மக்கள் மருத்துவர் ஐயா. ஜெயச்சந்திரனின்  பெயரை சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு சூட்ட வேண்டும் எனவும் தங்களை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்” என்று கூறியுள்ளார்.