புரட்டாசி பிறப்பு: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில் கட்டுபாடுடன் பக்தர்கள் தரிசனம்

புரட்டாசி பிறப்பு: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில் கட்டுபாடுடன் பக்தர்கள் தரிசனம்

புரட்டாசி மாதம் நம்பெருமாளுக்கு உகந்த மாதமாகும். இம்மாதத்தில் சனிக்கிழமைகளில் விரதமிருந்து நம்பெருமாளை வழிபாடு செய்தால் நற்பலன்கள் கிட்டும் என்பது ஐதீகம். இன்று புரட்டாசி மாத பிறப்பையொட்டி பூலோக வைகுண்டமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக 1மணி நேரத்திற்கு 300 பேர் வீதம் டோக்கன் கொடுக்கபட்டு பின்னர் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கபடுகின்றனர்.

புரட்டாசி பிறப்பு: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில் கட்டுபாடுடன் பக்தர்கள் தரிசனம்
புரட்டாசி பிறப்பு: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில் கட்டுபாடுடன் பக்தர்கள் தரிசனம்
புரட்டாசி பிறப்பு: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில் கட்டுபாடுடன் பக்தர்கள் தரிசனம்

முன்னதாக ரெங்கா கோபுரத்திலிருந்து வரும் பக்தர்கள் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்து கிருமி நாசினி கைகளில் தெளிக்கபட்டு பின்னர் முக கவசம் அணிந்திருந்தால் மட்டுமே கோவிலில் நம்பெருமாளை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். பக்தர்கள் வருகை தந்து சமூக இடைவெளியுடன் வரிசையில் நின்று நம்பெருமாளையும், தாயாரையும் வழிபட்டதுடன், சக்கரத்தாழ்வார் சன்னதிகளில் நெய்தீபமேற்றி வழிபட்டு சென்றனர்.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் எல்லா நாட்களிலும் ஆன்லைனிலும் நேரிலும் முன்பதிவு செய்து சாமி தரிசனம் செய்யலாம், புரட்டாசி மாதத்தில் வரும் அனைத்து சனிகிழமைகள் மட்டும் கட்டணம், கட்டணமில்லா தரிசனத்திற்க்கு ஆன்லைன் முன்பதிவு செய்தால் மட்டுமே கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார் என கோவில் இணை ஆணையர் ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

புரட்டாசி பிறப்பு: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில் கட்டுபாடுடன் பக்தர்கள் தரிசனம்
புரட்டாசி பிறப்பு: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில் கட்டுபாடுடன் பக்தர்கள் தரிசனம்