CSK வின் கடைசி போட்டி! – பஞ்சாப் பேட்டிங்

 

CSK வின் கடைசி போட்டி! – பஞ்சாப் பேட்டிங்

இன்று ஞாயிற்றுக்கிழமை அதனால், ஐபிஎல் 2020 தொடரில் இரண்டு போட்டிகள் முதல் போட்டியில் மோதிக்கொள்ளப்போகும் அணிகள் சென்னை சூப்பர் கிங்ஸ் vs கிங்ஸ் லெவன் பஞ்சாப்.

CSK வின் கடைசி போட்டி! – பஞ்சாப் பேட்டிங்

 13 போட்டிகளில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 8 போட்டிகளில் தோற்றும் 5-ல் மட்டுமே வென்றதால், பாயிண்ட் டேபிளில் கடைசி இடமான எட்டில் உள்ளது. இதில் சென்னை வென்றாலுமே பிளே ஆஃப் சுற்றுக்குச் செல்வது சாத்தியமில்லை என்றே சொல்லலாம். எனவே இன்றைய போட்டி இந்த சீசனில் CSK வின் கடைசிப் போட்டி. சென்னை அணியில் பெரிய மாற்றம் இருக்க வாய்ப்பில்லை. யாரேனும் ஒருவரை நீக்கி சாய்கிஷோருக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை பொறுத்தவரை 13 போட்டிகளில் ஆடி, 6 போட்டிகளில் வென்று 5-ம் இடத்தில் உள்ளது. இன்றைய வெற்றி என்பது அந்த அணிக்கு மிகவும் கட்டாயமான ஒன்று. சாதாரண வெற்றி அல்ல, மிக அதிக நெட் ரன்ரேட் மதிப்புள்ள வெற்றியைப் பெற வேண்டும். அப்போதே அதன் பிளே ஆஃப் சுற்று கனவு நனவாகும். அதனால், கடுமையாகப் போராடும்.

CSK வின் கடைசி போட்டி! – பஞ்சாப் பேட்டிங்

 

பஞ்சாப் டீமில் கிறிஸ் கெயில் நல்ல ஃபார்மில் இருப்பது அணிக்கு பலம். இன்னும் சொல்லப்போனால், அவர் அணியில் இடம்பெற்றதுதான் பல வெற்றிகள் பஞ்சாப்க்கு கிடைத்தது.  ராகுல், பூரண்,மேக்ஸ்வெல் என நல்ல பேட்டிங் வரிசை இருக்கிறது. மயங் அகர்வால் இம்முறை ஆடினால் கூடுதல் பலம். பவுலிங்கில் ஷமி, முருகன் அஷ்வின், பிஷ்னெய் என சமாளிக்கும் விதமாகவே இருக்கின்றன.

CSK வின் கடைசி போட்டி! – பஞ்சாப் பேட்டிங்

சென்னையும் மிக வலிமையான அணி அல்ல என்பதால் பஞ்சாப் அதிக ரன்ரேட் வெற்றியை இலக்காக வைத்து ஆடும். அந்த பிரஷரைப் பயன்படுத்தி சென்னை வெற்றியோடு இந்த சீசனை முடிக்க முயலும்.

டாஸ் வென்ற சென்னை கேப்டன் முதலில்பீல்டிங் தேர்வு செய்ததால் பஞ்சாப் வீரர்கள் பேட்டிங் ஆட தயாராகி வருகிறார்கள்.