டி.எச்.எஃப்.எல் ரூ.3688.5 கோடி மோசடி செய்துவிட்டது! – பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவிப்பு

 

டி.எச்.எஃப்.எல் ரூ.3688.5 கோடி மோசடி செய்துவிட்டது! – பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவிப்பு

டி.எச்.எஃப்.எல் நிதி நிறுவனம் ரூ.3688.58 கோடி அளவுக்கு நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக பஞ்சாப் நேஷனல் வங்கி குற்றம்சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டி.எச்.எஃப்.எல் ரூ.3688.5 கோடி மோசடி செய்துவிட்டது! – பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவிப்புநிரவ் மோடிக்கு பல ஆயிரம் கோடி கடன் கொடுத்து வசமாக சிக்கியது பஞ்சாப் நேஷனல் வங்கி. சொத்தை முடக்கிவிட்டோம், நகை மீட்டுவிட்டோம் என்று கூறி வருகிறதே தவிர, முழு பணத்தையும் திரும்பப் பெற முடியாமல் திணறி வருகிறது. தற்போது டி.எச்.எஃப்.எல் நிறுவனம் நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக அது அறிவித்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் பஞ்சாப் நேஷனல் வங்கி தெரிவிக்கும் நான்காவது பெரிய நிதி மோசடி இது.

டி.எச்.எஃப்.எல் ரூ.3688.5 கோடி மோசடி செய்துவிட்டது! – பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவிப்புடி.எச்.எஃப்.எல் நிதி நிறுவனம் பொதுத் துறை வங்கிகளிடமிருந்து ரூ.85 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று போலி நிறுவனங்களை உருவாக்கி அவற்றுக்கு கடன் கொடுத்தது போல கணக்கு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த போலி நிறுவனங்கள் வரிசையாக திவாலாகி வருவதால் பொதுத் துறை வங்கிகளிடம் பெற்ற கடனை திரும்பச் செலுத்த முடியாத நிலையில் உள்ளதாக டி.எச்.எஃப்.எல் தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, யூனியன் வங்கிகள் இந்த நிதி நிறுவனம் மீது மோசடி புகார் அளித்துள்ளன. தற்போது இந்த வரிசையில் பஞ்சாப் நேஷனல் வங்கியும் இணைந்துள்ளது.