நெருக்கடியான நிலை.. ஆக்சிஜன் ஒதுக்கீட்டை அதிகரியுங்க.. மத்திய அரசிடம் பஞ்சாப் முதல்வர் கோரிக்கை

 

நெருக்கடியான நிலை.. ஆக்சிஜன் ஒதுக்கீட்டை அதிகரியுங்க.. மத்திய அரசிடம் பஞ்சாப் முதல்வர் கோரிக்கை

பஞ்சாபில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ஆக்சிஜன் சப்ளை நெருக்கடியான நிலையில் உள்ளதால் தினசரி ஆக்சிஜன் ஒதுக்கீட்டை அதிகரிக்குமாறு மத்திய அரசிடம் முதல்வர் அமரீந்தர் சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாது அலை மிகவும் தீவிரமாக உள்ளது. கொரோனா வைரஸ் தற்போது உருமாற்றம் அடைந்து தீவிரமாக உள்ளதால், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. மேலும் ஆக்சிஜன் தேவைப்படும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால் பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுகிறது. இந்த சூழ்நிலையில் பஞ்சாப்புக்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை அதிகரிக்க மத்திய அரசிடம் அம்மாநில முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.

நெருக்கடியான நிலை.. ஆக்சிஜன் ஒதுக்கீட்டை அதிகரியுங்க.. மத்திய அரசிடம் பஞ்சாப் முதல்வர் கோரிக்கை
ஆக்சிஜன் சிலிண்டர்கள்


பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் இது தொடர்பாக டிவிட்டரில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பஞ்சாபில் ஆக்சிஜன் சப்ளை நிலவரம் மிகவும் நெருக்கடியான நிலையில் உள்ளது. மாநிலத்துக்கான தினசரி ஒதுக்கீட்டை அதிகரிக்க மற்றும் ஒதுக்கப்பட்ட திரவ உற்பத்தி ஆக்சிஜன் சப்ளையை பஞ்சாப்புக்கு அனுப்பப்படுவதை உறுதி செய்யவும் நான் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ஆகியோரிடம் கேட்டுக்கொள்கிறேன் என பதிவு செய்துள்ளார்.

நெருக்கடியான நிலை.. ஆக்சிஜன் ஒதுக்கீட்டை அதிகரியுங்க.. மத்திய அரசிடம் பஞ்சாப் முதல்வர் கோரிக்கை
கோவிட்-19 தடுப்பூசி

முன்னதாக பஞ்சாப் சுகாதாரத்துறை அமைச்சர் பல்பீர் சிங் சித் கூறுகையில், மத்திய அரசிடமிருந்து தடுப்பூசி குறைவாக வழங்கப்படுவதால், 1.9 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது. இதில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்புசிகள் இன்று (நேற்று) பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.தற்போதைய உள்கட்டமைப்பு வசதியை பயன்படுத்தி தினமும் 3 லட்சம் தடுப்பூசி போடலாம், ஒவ்வொரு வாரமும் 15 லட்சம் டோஸ் தேவைப்படும் மாநிலத்தில் தடுப்பூசிகள் வழங்குவதை முறைப்படுத்துமாறு பஞ்சாப் அரசு மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது என தெரிவித்து இருந்தார்.