நாட்டின் விவசாயிகளின் விருப்பத்தை குடியரசு தலைவரால் நிராகரிக்க முடியாது… பஞ்சாப் முதல்வர் நம்பிக்கை

நாட்டின் விவசாயிகளின் விருப்பத்தை குடியரசு தலைவரால் நிராகரிக்க முடியாது… பஞ்சாப் முதல்வர் நம்பிக்கை

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்க்கட்சிகளும், விவசாயிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மத்திய அரசு இயற்றிய வேளாண் சட்டங்களை தனது மாநிலத்தில் அமல்படுத்துவதை தவிர்க்க பஞ்சாப் அரசு அம்மாநில சட்டப்பேரவையில் 3 மசோதாக்களை நிறைவேற்றியது. மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை நிராகரித்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய முதல் மாநிலம் பஞ்சாப் என்பது குறிப்பிடத்தக்கது. பஞ்சாப் வழியை டெல்லி மற்றும் பல மாநிலங்கள் பின்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டின் விவசாயிகளின் விருப்பத்தை குடியரசு தலைவரால் நிராகரிக்க முடியாது… பஞ்சாப் முதல்வர் நம்பிக்கை
பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தா சிங்

பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: விவசாயம் மாநிலம் சம்பந்தப்பட்ட விஷயம். மத்திய அரசு இயற்றிய 3 வேளாண் சட்டங்களை நிராகரிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றினோம். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் டெல்லி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற உள்ளார். இந்தியாவின் சில மக்கள் மற்றும் அதன் விவசாயிகளின் நலனை குடியரசு தலைவர் நிராகரிக்க முடியாது.

நாட்டின் விவசாயிகளின் விருப்பத்தை குடியரசு தலைவரால் நிராகரிக்க முடியாது… பஞ்சாப் முதல்வர் நம்பிக்கை
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

நாட்டில் 85 சதவீதம் விவசாயிகள் உள்ளனர். பஞ்சாப் விவசாயிகளுக்காக நான் எல்லாவற்றையும் செய்கிறேன். ஆகையால், இந்த நாட்டின் விவசாயிகளுக்காக. இது பஞ்சாபிற்கு மட்டுமல்ல, இது ஹரியானா, பீகார், உத்தர பிரதேசம் மற்றும் பிற எல்லா இடங்களுக்கும் பரவியுள்ளது. குடியரசு தலைவர் ஆட்சி குறித்து எனக்கு கவலையில்லை. அவர்கள் எனது அரசாங்கத்தை கலைக்க விரும்பினால் அவர்கள் செய்யலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.