தங்கம், வெள்ளி வேஸ்ட்… வெங்காயம்தான் பெஸ்ட்… 58 மூடை வெங்காய மூட்டைகளை லபக்கிய புனே திருடர்கள்..

தங்கம், வெள்ளி வேஸ்ட்… வெங்காயம்தான் பெஸ்ட்…  58 மூடை வெங்காய மூட்டைகளை லபக்கிய புனே திருடர்கள்..

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் ரூ.2.35 லட்சம் மதிப்பிலான 58 வெங்காய மூடைகளை திருடிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நாட்டின் சில பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக வெங்காய சாகுபடி பாதிக்கப்பட்டது. இதனால் சந்தைகளுக்கு வெங்காயம் வரத்து குறைந்தது. இதன் எதிரொலியாக வெங்காயத்தின் விலை மளமளவென ஏற்றம் கண்டு வருகிறது. நாட்டின் சில பகுதிகளில் ஒரு வெங்காயத்தின் விலை சதத்தை நெருங்கி விட்டது. குறிப்பாக மகாராஷ்டிராவில் வெங்காயம் விலை தாறுமாறாக உள்ளது.

தங்கம், வெள்ளி வேஸ்ட்… வெங்காயம்தான் பெஸ்ட்…  58 மூடை வெங்காய மூட்டைகளை லபக்கிய புனே திருடர்கள்..
போலீசிடம் சிக்கிய வெங்காய திருடர்கள்

வெங்காயம் விலை கடுமையாக உயர்ந்து வருவதால் அதன் மீது திருடர்களின் கவனம் விழுந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் கடந்த வாரம் மவுஜே தேவ்ஜாலி என்ற கிராமத்தில் 550 கிலோ வெங்காயத்தை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சூழ்நிலையில் கடந்த 21ம் தேதியன்று புனேவின் ஓடுர் கிராமத்தில் ஒரு விவசாயி குடோனில் வைத்திருந்த ரூ.2.35 லட்சம் மதிப்பிலான 58 மூடைகளை திருடர்கள் திருடி சென்றுள்ளனர். அதற்கு அடுத்த அந்த விவசாயி ஒடுர் காவல் நிலையத்துக்கு சென்று புகார் கொடுத்துள்ளார்.

தங்கம், வெள்ளி வேஸ்ட்… வெங்காயம்தான் பெஸ்ட்…  58 மூடை வெங்காய மூட்டைகளை லபக்கிய புனே திருடர்கள்..
வெங்காய மூடைகள்

இதனையடுத்து விசாரணையில் இறங்கிய போலீசார், வெங்காய கொள்ளை நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், கிடைத்த தகவல்களை பயன்படுத்தி குற்றவாளிகள் 4 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான 49 மூடைகள் வெங்காயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். புனேவில் வெங்காயம் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவது விவசாயிகளிடம் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.