புலமை பித்தன் மறைவு : ஓபிஎஸ் – ஈபிஎஸ் இரங்கல்!

 

புலமை பித்தன் மறைவு : ஓபிஎஸ் – ஈபிஎஸ் இரங்கல்!

புலவர் புலமைப்பித்தன் மறைவுக்கு அதிமுக சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக முன்னாள் அவைத் தலைவர் புலமை பித்தன் அவர்கள் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றோம்.

புலமை பித்தன் மறைவு : ஓபிஎஸ் – ஈபிஎஸ் இரங்கல்!

தமிழ்நாடு சட்டமன்ற மேலவையின் துணைத் தலைவராக பணியாற்றிய புலவர் புலமைப்பித்தன் அவர்கள் கழக நிறுவன தலைவர் எழுச்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் பேரன்பை பெற்றவர். புரட்சித் தலைவரால் தமிழ்நாடு அரசு கவிஞராக நியமிக்கப்பட்டு தமிழ் தொண்டு ஆற்றியவர்.கோவை மாவட்டத்தில் ஒரு பள்ளியில் தலைமைத் தமிழாசிரியராகப் தனது வாழ்வைத் தொடங்கிய புலவர் புலமைப்பித்தன் அவர்கள் தமிழ்த் திரையுலகில் 1968 முதல் குடியிருந்த கோயில் ,அடிமைப்பெண், நல்ல நேரம் ,இதயக்கனி, மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் ,எங்கம்மா மகாராணி, உலகம் சுற்றும் வாலிபன் போன்ற எண்ணற்ற திரைப்படங்களுக்கு காலத்தால் அழியாத பாடல்களை எழுதிப் புகழ் பெற்றவர்.

கழக நிரந்தர பொதுச் செயலாளர் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களால், கழக இலக்கிய அணிச் செயலாளராகவும், பின்னர் கழக அவைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டு பணியாற்றிய புலவர் புலமைப்பித்தன் அவர்கள் , இயற்றிய வாசலிலே இரட்டை இலை கோலமிடுங்கள் போன்ற மனதை தொடும் எண்ணற்ற கழக கொள்கை விளக்கப் பாடல்கள் ,நாடாளுமன்ற சட்டமன்ற பொதுத் தேர்தல் பிரச்சாரங்களின் போது தமிழ்நாடு எங்கும் ஒலித்தன.

புலமை பித்தன் மறைவு : ஓபிஎஸ் – ஈபிஎஸ் இரங்கல்!

இத்தகைய சிறப்புக்குரிய அண்ணன் புலவர் புலமைப்பித்தன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு, எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளனர்.