Home விளையாட்டு கிரிக்கெட் 7 வருட ஏக்கம்… என்ட்ரி கொடுத்த சிஎஸ்கே… தோனி குறித்து நெகிழ்ந்த புஜாரா!

7 வருட ஏக்கம்… என்ட்ரி கொடுத்த சிஎஸ்கே… தோனி குறித்து நெகிழ்ந்த புஜாரா!

என்ன தான் புஜாரா டெஸ்ட் உலகின் அசைக்கு முடியாத சக்தியாக வலம் வந்தாலும் அவருக்கு லிமிடெட் ஓவர் போட்டிகளில் இந்திய அணி கூட இடம் அளிக்கவில்லை என்பதே நிதர்சனம். ஒருநாள் போட்டிகளில் அவர் வெறும் ஐந்தே போட்டிகளிலெயே ஆடியுள்ளார் என்பது முகத்தில் அறையும் பேருண்மை. டி20 போட்டிகளில் சொல்லவே வேண்டாம். அதிலும் அதிரடிக்குப் பஞ்சமில்லாத ஐபிஎல் தொடரில் சுத்தம்.

Image result for pujara dhoni

கொல்கத்தா, ஆர்சிபி, பஞ்சாப் என மூன்று வெவ்வேறு அணிகளில் 2008ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை புஜாரா ஐபிஎல்லில் களமிறங்கியிருக்கிறார். அன்றிலிருந்து அவர் ஆறு முறை ஏலப்பட்டியலில் தன்னுடைய பெயரைப் பதிவுசெய்தும் கேட்பாரின்றி ஒவ்வொரு முறையும் விலை போகாமல் இருந்தார். ஒரு கட்டத்திற்கு விரக்தியின் உச்சிக்குச் சென்ற புஜாரா, தன்னை ஏலத்தில் எடுக்குமாறு வாய் விட்டும் கேட்டுவிட்டார். தனக்கு அனைத்துவிதமான கிரிக்கெட் விளையாட வேண்டும் ஆசை இருக்கிறது; ஆனால் என்னை யாரும் வாங்க மாட்டேன் என்கிறார்கள் என்று மிகவும் நொந்து கூறினார்.

இச்சூழலில் தான் நேற்று நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் யாரும் எதிர்பாராவிதமாக புஜாராவை சிஎஸ்கே 50 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது. 7 வருடமாக ஐபிஎல்லுக்குள் நுழைய முடியாமல் ஏங்கி தவித்த புஜாராவை ஏலம் எடுத்தவுடன் அனைத்து அணியினரும் கைதட்டி வரவேற்றார்கள். ஏலம் எடுத்து ஐபிஎல்லுக்கு கம்பேக் கொடுத்த சிஎஸ்கேவுக்கு நன்றி தெரிவித்து தனது செல்ல மகளுடன் புஜாரா வீடியோ வெளியிட்டுள்ளார்.

Image result for pujara dhoni

அந்த வீடியோவில் அவர், “ஐபிஎல்லுக்குள் மீண்டும் நுழைவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. அதிலும் சிஎஸ்கேவுக்காக மஞ்சள் நிற ஜெர்சியில் ஆடப்போவது என்பது கற்பனைக்கு எட்டாத மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. தோனி கேப்டன்சியின் கீழ் மீண்டும் விளையாடப் போகிறேன். அவர் கேப்டனாக இருக்கும்போது தான் நான் இந்திய அணிக்காக அறிமுகமானேன். அவர் தலைமையின் கீழ் விளையாடிய நினைவுகள் இப்போதும் நிழலாடுகின்றன.

Image result for pujara dhoni

ஐபிஎல் தொடரைப் பொறுத்தவரை டெஸ்ட் மனநிலையிலிருந்து டி20 போட்டி மனநிலைக்கு மாற வேண்டும். ஐபிஎல்லில் விரைவாகவே கியரை மாற்ற வேண்டும். அதற்காக மனதளவிலும் டெக்னிக்கலாகவும் என்னைத் தயார்படுத்துவேன். இதன்மூலம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன் என்று நம்புகிறேன்” என்றார்.

மாவட்ட செய்திகள்

Most Popular

கோடையில் நீரிழப்பு பிரச்சினையை தவிர்க்க, இதை குடிங்க போதும்!

கொரோனா வைரஸ் தொற்று உலகையே அச்சுறுத்தி வரும் இந்த கால கட்டத்தில், நோய் பாதிப்பில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள, பலரும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை கடைபிடித்து...

“கொடுக்குற சீட்ட வாங்கிக்கோ… இல்லனா கிளம்பு” – அதிமுக, திமுக கூட்டணிக்குள் என்ன நடக்கிறது?

கருணாநிதியும் ஜெயலலிதாவும் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்கவே நடந்திருக்காது என அவலக்குரல்கள் கூட்டணிக் கட்சிகளிடையே எழ ஆரம்பித்திருக்கின்றன. வெளியே கத்திச் சொன்னால் கிடைக்கிற சீட்டும் கிடைக்காமல் போகும் என அஞ்சி உள்ளுக்குள்ளேயே...

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் துணை முதல்வர் ஓபிஎஸ்!

தமிழக துணை முதலமைச்சர் ஓபிஎஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். இந்தியாவில் கடந்த பல நாட்களாக கொரோனா பரவல் குறைந்த்து வந்த நிலையில் தற்போது மீண்டும் தொற்று...

கோவை கோனியம்மன் கோயில் தேரோட்டம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

கோவை கோவையில் புகழ்பெற்ற கோனியம்மன் கோவில் தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. கோவை மாநகரின் காவல் தெய்வமாக கருதப்படும் கோனியம்மன்...
TopTamilNews