Home அரசியல் நான் சொன்னது நடந்துச்சா? இந்த அவமானம் தேவையா? - புகழேந்தி

நான் சொன்னது நடந்துச்சா? இந்த அவமானம் தேவையா? – புகழேந்தி

தமிழ்நாட்டில் மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல் தோல்விக்கு அதிமுக தான் காரணம் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி விமர்சித்தார். அதேபோல ஓபிஎஸ் குறித்தும் நக்கலடித்து பேசியிருந்தார். அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிமுக செய்தித் தொடர்பாளராக இருந்த புகழேந்தி, ஒவ்வொரு முறையும் கூட்டணி சேர்வதும் தேர்தல் தோல்விக்கு பின்னர் மற்றவர்களை விமர்சனம் செய்வதும் பாமகவின் வாடிக்கையாக உள்ளது எனக் கூறினார். இதனால் அவரை கட்சியிலிருந்தே நீக்கி ஈபிஎஸ், ஓபிஎஸ் உத்தரவிட்டனர்.

நான் சொன்னது நடந்துச்சா? இந்த அவமானம் தேவையா? - புகழேந்தி
This image has an empty alt attribute; its file name is ops-eps-1024x768.jpg

இந்நிலையில் புகழேந்தி தற்போது வெளியிட்டுள்ள வீடியோவில், எங்களுடன் அதிமுக கூட்டணியில் இல்லை என்றால் 20 இடங்களில் கூட வெற்றி பெற்றிருக்காது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்திருந்தார். ஒ. பன்னீர்செல்வம்லாம் எங்களுக்கு ஒரு பொருட்டே இல்லை. அவருக்கு தென் தமிழகத்தில் செல்வாக்கே இல்லை என தெரிவித்தார். இதற்கு தான் நான் பதில் சொன்னேன். ஆனால் இன்று நான் நீதிமன்றம் வரை சென்று நிற்கிறேன். என்னை கட்சியிலிருந்து நீக்கினார்கள். ஆனால் இன்று என்ன நடந்தது பாமக அதிமுகவுடனான கூட்டணியை முறித்துக்கொண்டு உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் அனைத்து இடங்களையும் அதிமுக எடுத்துக்கொள்வார்கள். ஆகவே பாமகவினர் அந்த இடங்களை பிடிக்க வேண்டும் என்பதற்காக தனித்து போட்டி என அறிவித்துள்ளனர்.

பாமகவின் அறிவிப்புக்கு எடப்பாடி பழனிசாமியிடமிருந்து இன்னும் பதில்வரவில்லை. முன்னாள் அமைச்சர் தங்கமணி, வேலுமணியை விட்டு பாமகவுடன் பேச சொல்வார். மனு தாக்கல் செய்யும் நேரத்தில் நேரத்தில் பாமக அதிமுகவுடன் கூட்டணி இல்லை என அறிவிக்கிறது. புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு, அம்மாவால் வளர்க்கப்பட்ட மாபெரும் இயக்கத்தில் கூட்டணியை முறித்து கொண்டு சென்ற பாமகவுக்கு பதில் சொல்லக்கூட யாரும் இல்லை. பாமகவினர் என்னென்ன? சொன்னார்கள்… குரங்கு கையில் பூமாலை கிடைத்த மாதிரி எடப்பாடி பழனிசாமி கையில ஆட்சி கிடைத்துவிட்டது, நிர்வாகம்னா என்னவென தெரியுமா?

ஆசை இருக்கு..! ஆனால் ஆள் இல்லையே? குழப்பத்தில் ஓபிஎஸ் கேம்ப்..!  உற்சாகத்தில் இபிஎஸ் கேம்ப்..! | OPS camp upset.. EPS camp in excitement

நிதியமைச்சர் ஓ பன்னீர்செல்வத்துக்கு நிதியை பற்றி என்ன தெரியும், அவருக்கு அம்மாவின் சூட்கேசை தூக்க தான் தெரியும், ஒன்னுமே தெரியாத மண்ணு, டயர் நக்க சொன்னார்கள் நக்குவார்கள் என்றெல்லாம் சொன்னார்கள். இன்று அதிமுகவின் சுயமரியாதையே போய்விட்டது. மீண்டும் எங்களிடம் வந்து நில்லுங்கள் என பாமக மறைமுகமாக மிரட்டுகிறது. அம்மா இருக்கும்போது கூட்டணி கட்சிகளை தன் கைக்குள் வைத்திருந்தார். ஆனால் இப்போது அதிமுகவை கூட்டணி கட்சிகள் கைக்குள் வைத்துள்ளன. இந்த அவமானம் தேவையா? என்பதை தொண்டர்கள் சிந்திக்க வேண்டும்” எனக் காட்டமாக பேசியுள்ளார்.

நான் சொன்னது நடந்துச்சா? இந்த அவமானம் தேவையா? - புகழேந்தி

மாவட்ட செய்திகள்

சமீபத்திய செய்திகள்

ஆல்-ரவுண்டராக அசத்திய மேக்ஸ்வெல், ஹாட்ரிக் விக்கெட் எடுத்த ஹர்ஷல் படேல்! பெங்களூரு அணி அசத்தல் வெற்றி

நடப்பு ஐ.பி.எல் தொடரின் 39-வது லீக் ஆட்டமானது துபாய் சர்வதேச மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும்மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகளுக்கிடையே நடைபெற்றது.

”எடப்பாடியை கட்சியிலிருந்து நீக்கினால் மட்டுமே அதிமுகவை காப்பாற்ற முடியும்”

எடப்பாடி பழனிச்சாமியை கட்சியிலிருந்து நீக்கினால் மட்டுமே அதிமுகவை காப்பாற்ற முடியும் என அதிமுகவின் முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பாஜக, அதிமுக தனித்து போட்டி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கூட்டணி கட்சிகளான பாஜகவும் அதிமுகவும் தனித்து போட்டியிடுகிறது. பிரச்சார வாகனத்தில் கூட்டணி கட்சியின் கொடிகள் இல்லாமலும், பொதுமக்களிடம் பரப்புரை நோட்டீஸ் கொடுக்காமலும் பாஜகவினர் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர்

சக அதிகாரியால் வன்கொடுமை செய்யப்பட்ட பெண் விமானப்படை அதிகாரி

கோவையில் இந்திய விமான படை பயிற்சி கல்லூரியில் பெண் விமானப்படை அதிகாரியை வன்கொடுமை செய்த சக அதிகாரி கைது செய்யப்பட்டார்.
TopTamilNews