ஏப். 12இல் புதுக்கோட்டை உள்ளூர் விடுமுறை ரத்து… சோகத்தில் மக்கள்!

 

ஏப். 12இல் புதுக்கோட்டை உள்ளூர் விடுமுறை ரத்து… சோகத்தில் மக்கள்!

புதுக்கோட்டை மாவட்டத்துக்கு வரும் ஏப்ரல் 12ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மார்ச் 31அம் தேதி ஆட்சியர் உமா மகேஸ்வரி அறிவித்தார். நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி மாவட்ட அளவில் ஏப்ரல் 12ஆம் தேதி மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இச்சூழலில் இப்போது தமிழ்நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தினமும் பாதிப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்தை நெருங்குகிறது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் - தமிழ் விக்கிப்பீடியா

கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. முக்கியமாக கோயில் திருவிழாக்கள், மத வழிபாட்டு கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. ஏப்ரல் 30ஆம் தேதி வரை இந்த தடை தொடரும் என்றும் கூறியுள்ளது.

ஏப். 12இல் புதுக்கோட்டை உள்ளூர் விடுமுறை ரத்து… சோகத்தில் மக்கள்!

ஏப்ரல் 10ஆம் தேதிக்கு மேல் கோயில் திருவிழாக்கள் நடக்காது என்பதால், புதுக்கோட்டைக்கு அளிக்கப்பட்ட உள்ளூர் விடுமுறை ரத்து செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தற்போது அறிவித்திருக்கிறார். அன்றைய தினம் பள்ளிகள்ம், அரசு அலுவலங்கள் வழக்கம் போல இயங்கும்.