5 மாதங்களுக்கு பின்.. புதுச்சேரியில் தலைதூக்கும் கொரோனா!

 

5 மாதங்களுக்கு பின்.. புதுச்சேரியில் தலைதூக்கும் கொரோனா!

கொரோனா வைரஸ் இரண்டாம் அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இம்மாத தொடக்கத்தில் 10 ஆயிரமாக இருந்து வந்த பாதிப்பு தற்போது 4 மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 47 ஆயிரம் பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். 270 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு பாதிப்பு மீண்டும் தலைதூக்குவதால் லாக் டவுன் அமல்படுத்தப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவது மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

5 மாதங்களுக்கு பின்.. புதுச்சேரியில் தலைதூக்கும் கொரோனா!

தமிழகம், மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட 6 மாநிலங்களில் தான் அதிகளவில் பாதிப்பு பரவி வருகிறதாம். நாளொன்றுக்கு பதிவாகும் பாதிப்பில் கிட்டத்தட்ட 80% அம்மாநிலங்களில் இருந்தே பதிவாகிறதாம். இதனால் அந்தந்த மாநில அரசுகள் தீவிர நடவடிக்கையை கையாண்டு வருகின்றன. இந்த நிலையில், புதுச்சேரியில் 5 மாதங்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு 100க்கு மேல் பதிவாகி இருப்பதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

புதுச்சேரியில் புதிதாக 126 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், 2 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். அங்கு மொத்தம் 40,645 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 679 பேர் உயிரிழந்த நிலையில், 39,380 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.