புதுச்சேரியில் 13 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு!

 

புதுச்சேரியில் 13 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் அதே வேளையில் புதுச்சேரியிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அங்கு கொரோனா அதிகமாக பரவும் ஏனாமில் கடந்த 12 ஆம் தேதி வரை முழுபொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. அதே போல எல்லா செவ்வாய் கிழமைகளிலும் முழு பொதுமுடக்கம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நேற்று புதுச்சேரியின் 52 இடங்களில் ஒரு வாரத்துக்கு மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லாத வண்ணம் தடுக்க முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

புதுச்சேரியில் 13 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு!

இதனிடையே மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில் புதுச்சேரியில் கடைபிடிக்கப்பட்டு வந்த இ-பாஸ் முறை ரத்து செய்யப்பட்டது. அங்கு கொரோனா அதிகமாக பரவி வருவதற்கு இதுவும் ஒரு காரணம் என கூறப்படுகிறது. சமீபத்தில் நடைபெற்ற புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடரில் எம்எல்ஏ ஒருவருக்கு கொரோனா உறுதியானதால், அவசர அவசரமாக கூட்டத்தொடர் நடத்தி முடிக்கப்பட்டது. இதன் பிறகு, வழக்கத்தை விட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.

புதுச்சேரியில் 13 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு!

இந்த நிலையில் புதுச்சேரியின் கொரோனா பாதிப்பு விவரம் வெளியாகியுள்ளது. புதுச்சேரியில் மேலும் 604 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 13,024 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இதுவரை 8,080 பேர் குணமடைந்த நிலையில் 199 பேர் உயிரிழந்துள்ளனர்.