விதிமுறைகளை கடைபிடிக்காவிட்டால் ஊரடங்கு கடுமையாக்கப்படும் : புதுச்சேரி முதல்வர் எச்சரிக்கை!

விதிமுறைகளை கடைபிடிக்காவிட்டால் ஊரடங்கு கடுமையாக்கப்படும் : புதுச்சேரி முதல்வர் எச்சரிக்கை!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் புதுச்சேரியிலும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த புதுச்சேரி அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற புதுச்சேரி சட்டப்பேரவையின் போது காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவருக்கு கொரோனா உறுதியானதால், மரத்தடியில் சட்டப்பேரவை அவசர அவசரமாக நடத்தி முடிக்கப்பட்டது. புதுச்சேரியில் இதுவரை பரவிய கொரோனா தொற்றில் பெருமளவு ஏனாம் பகுதியில் தான் இருப்பதாக கூறப்படுகிறது. அதனால் நாளை முதல் 11 ஆம் தேதி வரை முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விதிமுறைகளை கடைபிடிக்காவிட்டால் ஊரடங்கு கடுமையாக்கப்படும் : புதுச்சேரி முதல்வர் எச்சரிக்கை!

இந்த நிலையில் மக்கள் அரசின் விதிமுறைகளை முறையாக பின்பற்றவில்லை என்றால் ஊரடங்கு கடுமையாக்கப்படும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். ஊரடங்கு தொடர்பாக ஆகஸ்ட் 12 ஆம் தேதி நடக்கவிருக்கும் பேரிடர் மேலாண்மை கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.