கொரோனா நிவாரண நிதியாக ரூ.3,000 அறிவிப்பு – முதல்வர் அதிரடி!

 

கொரோனா நிவாரண நிதியாக ரூ.3,000 அறிவிப்பு – முதல்வர் அதிரடி!

நடந்துமுடிந்த தேர்தலில் புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்றது. இதனால் அக்கூட்டணியே ஆட்சியமைக்கவிருக்கிறது. தற்போது வரை சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவியேற்கா விட்டாலும் கடந்த 7ஆம் தேதி ரங்கசாமி புதுச்சேரியில் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். ஆனால் அவருக்கு 9ஆம் தேதி கொரோனா தொற்று உறுதியானது. கொரோனா உறுதியானதை அடுத்து சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து ஒரு வாரம் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பூரண குணமடைந்த அவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனார்.

கொரோனா நிவாரண நிதியாக ரூ.3,000 அறிவிப்பு – முதல்வர் அதிரடி!

அதிலிருந்து ஒரு வாரம் தனிமைப்படுத்தலில் இருந்தார். தற்போது அவர் வெளியில் வந்திருப்பதால் புதுச்சேரியில் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. பாஜகவுடனான அமைச்சரவை பங்கீடு தான் ஆட்சியமைக்க தடையாக இருப்பதாக் கூறப்பட்டது. இன்று ஆளுநர் மாளிகைக்கு ஒரு கோப்புடன் ரங்கசாமி சென்றார். அந்தக் கோப்பில், ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணமாக அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ரூ.3 ஆயிரம் வழங்க அனுமதிக்க வலியுறுத்தப்பட்டிருந்தது.

கொரோனா நிவாரண நிதியாக ரூ.3,000 அறிவிப்பு – முதல்வர் அதிரடி!

இந்தக் கோப்புக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை உடனடியாக ஒப்புதல் அளித்துள்ளார். இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த ரங்கசாமி, “கொரோனா இரண்டாவது அலையால் மக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் கரோனா நிவாரண நிதியாக அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ரூ.3000 வழங்கப்படும். இதனால் 3.5 லட்சம் ரேஷன் அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள். இது விரைவில் வழங்கப்படும்” என்றார்.