புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மத்திய அரசு எந்தவித உதவியும் செய்யவில்லை- முதல்வர் நாராயணசாமி

 

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மத்திய அரசு எந்தவித உதவியும் செய்யவில்லை- முதல்வர் நாராயணசாமி

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு எந்தவித உதவியையும் மத்திய அரசு செய்யவில்லை என்றும் அவர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க எந்த திட்டமும் மத்திய அரசிடம் இல்லை என்றும் புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய நிலையில், “மத்திய அரசு ஊரடங்கை நீட்டிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகின்றது. அதனால் பாதிக்கப்படும் மாநிலங்களின் பொருளாதார நிலைப்பற்றி கருத்தில் கொள்வதில்லை.கொரோனா நோயை கட்டுப்படுத்த தேவையான மருத்துவ உபகரணங்கள் பலமுறை கேட்டும் அதை மத்திய கொடுக்கவில்லை. மேலும் பொதுமுடக்கத்தால் இழந்த பொருளாதாரத்தை மீட்க மத்திய அரசு எந்தவித பொருளாதார உதவியையும் செய்யவில்லை.தொடர்ந்து ஊரடங்கு உத்தரவை நீட்டித்தால் நாட்டின் பொருளாதாரம் சீர்குழைந்து விடும்.

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மத்திய அரசு எந்தவித உதவியும் செய்யவில்லை- முதல்வர் நாராயணசாமி
மாநிலங்களின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படுகின்றது. ஊரடங்கு முடிந்த பிறகு இழந்த பொருளாதாரத்தை மீட்க என்ன செய்ய வேண்டும் என்று மத்திய அரசு இதுவரை சிந்திக்கவில்லை. மத்திய அரசிடம் எந்த திட்டமும் இதுவரை இல்லை அதைப்பற்றி கவலைப்படவும் இல்லை” என தெரிவித்தார்.