சூர்யாவின் கருத்து யதார்த்தமானது; பெரிதுபடுத்தாதீர்கள்- முதல்வர் நாராயணசாமி

 

சூர்யாவின் கருத்து யதார்த்தமானது; பெரிதுபடுத்தாதீர்கள்- முதல்வர் நாராயணசாமி

நடிகர் சூர்யாவின் கருத்து யதார்த்தமானது அதை நீதியரசர்கள் பெரிது படுத்த வேண்டாம் என முதல்வர் நாராயணசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நீட் தேர்வு அச்சத்தினால் மாணவ, மாணவிகள் தொடர்ந்து தற்கொலை செய்து வரும் நிலையில், நீட் தேர்வுக்கு எதிராக நடிகர் சூர்யா கடுமையான விமர்சனத்தை முன் வைத்தார். ஏழை எளிய மக்களின் நிதர்சனம் அறியாதவர்கள் கல்விக் கொள்கைகளை வகுக்கிறார்கள் என்று ஆவேசமாக கூறியிருந்தார். சூர்யாவின் கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் வலுத்து வந்தது.

சூர்யாவின் கருத்து யதார்த்தமானது; பெரிதுபடுத்தாதீர்கள்- முதல்வர் நாராயணசாமி

இந்நிலையில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “நீட்தேர்வு விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யாவின் கருத்து எந்தவித உள்நோக்கமும் இல்லை. அவை யதார்த்தமான வார்த்தைகள். ஆகவே அதை நீதிமன்றங்கள் பெரிது படுத்தக்கூடாது. நீதிமன்றத்தை அவதிக்கும் எண்ணத்தில் பேசவில்லை. ஆகவே நீதியரசர்கள் இதை எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டும். மக்களின் பிரதிபளிப்பையே நடிகர் சூர்யா பேசினார். இதை கருத்து சுதந்திரமாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். புதுச்சேரி மக்களை இருகரம்கூப்பி வேண்டுகின்றேன். சுகாதாரத்துறையினர் வீடு விடாக பரிசோதனைக்கு வரும்போது ஒத்துழைப்பு தரவேண்டும். அப்போதுதான் உயிரிழப்பு விகிதத்தை குறைக்க முடியும்” எனக் கூறினார்.