திட்டமிட்டபடி பட்ஜெட் தாக்கல் செய்ய முடியாதிருந்தால் ராஜினாமா செய்திருப்பேன் – புதுச்சேரி முதல்வர்

திட்டமிட்டபடி பட்ஜெட் தாக்கல் செய்ய முடியாதிருந்தால் ராஜினாமா செய்திருப்பேன் – புதுச்சேரி முதல்வர்

திட்டமிட்டபடி பட்ஜெட் தாக்கல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருந்தால் ராஜினாமா செய்திருப்பேன் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, “பேரவை மாண்பை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக திட்டமிட்ட தேதியில் பட்ஜெட்டை தாக்கல் செய்தேன். திட்டமிட்டபடி பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருந்தால் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து இருப்பேன் மத்தியில் மாற்று அரசு இருந்தாலும் நான்கு ஆண்டுகளில் பல துறைகளில் புதுச்சேரி அரசு வெற்றி பெற்று மத்திய அரசின் விருதுகளை பெற்றுள்ளது.

திட்டமிட்டபடி பட்ஜெட் தாக்கல் செய்ய முடியாதிருந்தால் ராஜினாமா செய்திருப்பேன் – புதுச்சேரி முதல்வர்

பல்வேறு சிரமங்களுக்கும் போராட்டங்களும் இடையில் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தேன. புதுச்சேரி அரசை முடக்கும் சதி நடந்து வருகிறது. அதை எதிர்த்து போராடி வருகிறேன். நியாயம் தான் வெல்லும் என்பதில் உறுதியாக இருக்கின்றேன். சட்டமன்றத்தின் மாண்பை காப்பாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் ஆளுநர் உரையாற்ற வரவில்லை என்றாலும் திட்டமிட்டபடி பேரவையை நடத்தி பட்ஜெட்டை தாக்கல் செய்தேன். கொரோனா நெருக்கடியிலும் புதுச்சேரி அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது” எனக்கூறினார்.