இ- பாஸ் இருந்தாலும் புதுச்சேரிக்குள் அனுமதியில்லை! அரசு அதிரடி

 

இ- பாஸ் இருந்தாலும் புதுச்சேரிக்குள் அனுமதியில்லை! அரசு அதிரடி

தமிழகத்திலிருந்து வருவோர் இ பாஸ் வைத்திருந்தாலும் புதுச்சேரிக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி, “ஈ- பாஸ் இருந்தாலும் சென்னை – கடலூர் – விழுப்புரத்தில் இருந்து வருபவர்களை உள்ளே அனுமதிக்க மாட்டோம். கொரோனா நோய் தொற்றில் இருந்து காப்பாற்ற புதுச்சேரிய முழுமையாக கட்டுக்குள் கொண்டுவர தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சென்னையில் இருந்து வருபவர்களை புதுச்சேரிக்குள் அனுமதிக்க மாட்டோம். அப்படி வந்தாலும் அவர்கள் தனிமைப்படுத்ப்படுவார்கள். கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து மருத்துவ உதவிக்கு தவிர வேறு யார் வந்தாலும் சரி ஈ பாஸ் கொண்டு வந்தாலும் புதுச்சேரிக்குள் விடமாட்டோம்.

இ- பாஸ் இருந்தாலும் புதுச்சேரிக்குள் அனுமதியில்லை! அரசு அதிரடி

வெளிமாநிலத்தில் இருந்து வருபவர்களால் தான் புதுச்சேரியில் நோய்த்தொற்று ஏற்படுகிறது. அதனால் அதை கட்டுப்படுத்த வேண்டும் என்று இன்று நடந்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் நடந்த கூட்டத்தில் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டது. நாளை முதல் முககவசம் அணியாமல் சென்றால் அபராதம் இரட்டிப்பாக விதிக்கப்படும், வியாபாரிகள் தனிமனித இடைவெளியை கடைபிடிக்கவில்லை என்றால் அபாரதம் அதிகப்படுத்தப்படும்” என தெரிவித்தார்.

புதுச்சேரியில் இன்று ஓரே நாளில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 215 ஆக அதிகரித்துள்ளது.