புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல்!

 

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல்!

புதுச்சேரியில் காங்கிரஸ் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த நமச்சிவாயம், மல்லாடிகிருஷ்ணாராவ், எம்.எல்.ஏ.க்கள் தீப்பாய்ந்தான், ஜான்குமார் ஆகியோர் அடுத்தடுத்து தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதையடுத்து புதுவை சட்டசபையில் ஆளும் கட்சியும், எதிர்கட்சியும் தலா 14 எம்.எல்.ஏ.க்களுடன் சமபலத்தில் இருந்தது. இந்த சூழலில் அண்மையில் எம்.எல். ஏ வெங்கடேசனும் பதவி விலகினார். இதனிடையே வரும் பிப்ரவரி 22- ஆம் தேதி, புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டத்தைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு, துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டார். மேலும், பேரவையில் நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பை வீடியோவில் பதிவு செய்யவும் ஆளுநர் தமிழிசை உத்தரவிட்டிருந்தார்.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல்!

இந்த சூழலில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, இதனால் புதுச்சேரி அரசு கவிழும் சூழல் ஏற்பட்டுள்ளது. நாளை பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்டிருந்த சூழலில் இன்று இரவு முதலமைச்சர் நாராயணசாமி ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.