“மூதாட்டி பகிரங்க குற்றச்சாட்டு” : ராகுலிடம் மாற்றி மொழிப்பெயர்த்த முதல்வர் நாராயணசாமி

 

“மூதாட்டி பகிரங்க குற்றச்சாட்டு” : ராகுலிடம் மாற்றி மொழிப்பெயர்த்த முதல்வர் நாராயணசாமி

பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நேற்று ஒரு நாள் பயணமாக புதுச்சேரி வந்திருந்தார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி . டெல்லியில் இருந்து சென்னை வந்த அவர் தனி விமானம் மூலம் புதுச்சேரிக்கு சென்றார். அங்கு முத்தியால்பேட்டை மீனவர்களுடன் ராகுல்காந்தி கலந்துரையாடினார்.

“மூதாட்டி பகிரங்க குற்றச்சாட்டு” : ராகுலிடம் மாற்றி மொழிப்பெயர்த்த முதல்வர் நாராயணசாமி

அப்போது ராகுல் காந்தியிடம் பொதுமக்கள் தங்களுடைய குறைகளை கூறினர். அப்போது மீனவ சமூகத்தை சேர்ந்த மூதாட்டி ஒருவர் எழுந்து, தங்களின் வாழ்வாதாரம் முன்னேற்றம் அடையவில்லை. தாங்கள் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறோம். மீனவ சமுதாய மக்கள் கஷ்டத்தை யாரும் போக்கவில்லை. புயல் பாதிப்பின் போது நாராயணசாமி எங்களை வந்து ஒருமுறைகூட சந்திக்கவில்லை என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

ஆனால் ராகுலுக்கு தமிழ் தெரியாது என்பதால் ராகுல் அவர் என்ன கூறுகிறார் என்று முதல்வர் நாராயணசாமியிடம் மொழிப்பெயர்த்து கூற சொன்னார். ஆனால் முதல்வர் நாராயணசாமியோ, அவர் புயல் பாதிப்பு குறித்து பேசுகிறார்.

“மூதாட்டி பகிரங்க குற்றச்சாட்டு” : ராகுலிடம் மாற்றி மொழிப்பெயர்த்த முதல்வர் நாராயணசாமி

நான் அப்போது அவரை வந்து சந்தித்தேன். அதை தான் அவர் சொல்கிறார் என்று மாற்றி தவறாக கூறினார். இதற்கான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பாஜகவை சேர்ந்த நிர்வாகிகள் பதிவிட்டு விமர்சித்து வருகின்றனர்.