புதுச்சேரி பாஜக எம்.எல்.ஏ திடீர் மரணம்: அதிர்ச்சியில் பாஜக!

 

புதுச்சேரி பாஜக எம்.எல்.ஏ திடீர் மரணம்: அதிர்ச்சியில் பாஜக!

புதுச்சேரி பாஜக நியமன எம்.எல்.ஏவான சங்கர் மாரடைப்பால் காலமானார்.

பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த 3 பேரை புதுச்சேரி சட்டப்பேரவையில் நியமன எம்.எல்.ஏக்களாக ஆளுநர் கிரண் பேடி நியமித்திருந்தார். செல்வ கணபதி, சாமிநாதன், சங்கர் ஆகிய 3 பேரும் கிரண்பேடியால் பட்டனர். இந்த நிலையில், பாஜக நியமன எம்.எல்.ஏ சங்கர் திடீர் மாரடைப்பால் காலமானார்.

புதுச்சேரி பாஜக எம்.எல்.ஏ திடீர் மரணம்: அதிர்ச்சியில் பாஜக!
சாமிநாதன், செல்வ கணபதி, சங்கர்

அவருக்கு இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டதாகவும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகின்றன. சங்கர் மறைவால் புதுச்சேரி சட்டப்பேரவையில் பாஜக நியமன எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 3ல் இருந்து 2 ஆக குறைந்திருக்கும் நிலையில், இவரது மறைவு பாஜகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சங்கர் மறைவுக்கு பாஜக தலைவர்கள் உட்பட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.