குமரி அருகே கால்வாயில் மூழ்கி பொதுப்பணித்துறை ஊழியர் பலி!

 

குமரி அருகே கால்வாயில் மூழ்கி பொதுப்பணித்துறை ஊழியர் பலி!

கன்னியாகுமரி

குமரி மாவட்டம தோவாளையில் கால்வாய் அடைப்பை சீரமைக்க முயன்ற பொதுப் பணித்துறை ஊழியர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.

குமரி மாவட்டம் திருவட்டார் அருகே சுருளகோடு செல்லன்துறுத்தியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (52). இவர் பொதுப்பணித்துறையில் நீர்வள பணி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், தோவாளை கால்வாயில் ஆற்றுப்பாலம் அருகே பண்ணைவிளை மடையில் அடைப்பு ஏற்பட்டு இருப்பதாக, பொதுப்பணி துறையினருக்கு விவசாயிகள் தகவல் அளித்தனர். இதனை அடுத்து, மடையில் ஏற்பட்ட அடைப்பை சரிசெய்யும் பணியில் ராஜேந்திரனும், மற்றொரு ஊழியரும் ஈடுபட்டிருந்தனர்.

குமரி அருகே கால்வாயில் மூழ்கி பொதுப்பணித்துறை ஊழியர் பலி!

நேற்று மடையில் பெரிய கல் சிக்கியிருப்பது தெரிய வநததால், ராஜேந்திரன் நீரில் மூழ்கி கல்லை அகற்றினார். அப்போது, தண்ணீர் வேகமாக வந்ததால், ராஜேந்திரனால் வெளியே வர முடியவில்லை. இதை பார்த்த சக ஊழியர்கள் அவரை மீட்க முயற்சித்தும் முடியவில்லை. இதுகுறித்து அந்த பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் நாகர்கோவில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

தொடர்ந்து கால்வாயில் இறங்கி தேடியபோது, ராஜேந்திரன் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தொடர்ந்து, ராஜேந்திரன் உடலை ஆரல்வாய்மொழி போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.