ஜூலை 3 ஆம் வாரத்தில் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் – அமைச்சர் செங்கோட்டையன்

 

ஜூலை 3 ஆம் வாரத்தில் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் – அமைச்சர் செங்கோட்டையன்

ஜூன் 1 ஆம் தேதி முதல் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கும் என்று அறிவித்த அரசு, கொரோனா வைரஸின் அதிவேக பரவலால் ஜூன் 15 ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும் இதனிடையே மீதமுள்ள 11 ஆம் வகுப்பு தேர்வுகளும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் படி தேர்வுகளை நடத்த அனைத்து பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. அதே போல பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால்டிக்கெட்டை இணைய தளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 3 ஆம் வாரத்தில் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் – அமைச்சர் செங்கோட்டையன்

இந்த நிலையில் பொதுத்தேர்வு குறித்து ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், 10,11 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை 3 ஆவது வாரத்தில் வெளியாகும் என்றும் தற்போது பள்ளிகளை திறக்க முடியாது என்பதால் ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடத்த முடியும் என்றும் கூறினார். ஒரு சில மாணவர்களுக்கு தான் கொரோனா பாதிப்பு இருப்பதாகவும் பாதிப்பு அதிகமாக இருக்கும் பகுதிகளில் வசிக்கும் மாணவர்கள் வேனில் அழைத்து வரப்படுவார்கள் என்றும் தெரிவித்தார். மேலும், அந்த மாணவர்கள் தனியாக தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.