“10ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வா?… வதந்தி பரப்பாதீர்”

 

“10ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வா?… வதந்தி பரப்பாதீர்”

கொரனோ பரவல் காரணமாக 9,10, 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. கடந்த ஆண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட போது காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. ஆனால், இந்த முறை மதிப்பெண் கணக்கிடும் முறையில் குழப்பம் நீடிக்கிறது. இதன் காரணமாக, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி அளவில் தேர்வு நடத்த பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின.

“10ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வா?… வதந்தி பரப்பாதீர்”

இந்த நிலையில், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்பட உள்ளதாக வெளியான செய்தியில் உண்மையில்லை என பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார். பிரபல செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த அவர், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் தேர்வுகளை ரத்து செய்த முதல்வரின் அறிவிப்பு சரியானது என நீதிமன்றமே கூறி சொல்லிவிட்டது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து பள்ளிக்கல்வித் துறை தரப்பில் இருந்தோ, அரசு தரப்பில் இருந்தோ அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை என்று கூறினார்.

மேலும், அந்த தகவல்களை கேட்டு மாணவர்கள் குழப்பம் கொள்ள வேண்டாம். மீண்டும் தேர்வு நடத்தப்பட உள்ளதாக வெளியாகும் தகவல் உண்மை இல்லை. இதுபோன்ற தகவலை வெளியிட்டு மாணவர்களை குழப்ப வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன் என்றும் தெரிவித்தார்.